NFGG ஊடகப் பிரிவு-
புதிய காத்தான்குடி பதுறியா வீதி மற்றும், மஞ்செந்தொடுவாய் புதிய பாலமுனை வீதி என்பவற்றைபுணரமைத்து செப்பனிடுவதற்காகன நடவடிக்கைகளை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG)மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பில் NFGGயின் தவிசாளர் பொறியளாளர் அப்துர்ரஹ்மான் மேற்கொண்ட தீவிர முயற்சிகளின்பலனாக மிக மோசமான நிலையில் காணப்பட்ட புதிய காத்தான்குடி வீதிகளில் ஒன்றான (புதியபாலமுனை வீதியினை நோக்கிச்செல்லும், பதுறியா பள்ளிவாயல் சந்தி முதல் ஹிழுறியா நலன்புரி சங்கசந்தி வரையான) பதுறியா வீதி அபிவிருத்தி அதிகார சபையினூடாக தற்போது புனரமைக்கப்பட்டுவருகிறது.
சில வாரங்களுக்கு முன்னர் இப்பிரதேச மக்களுடனா சந்திப்பின்பொன்றினை அப்துர் ரஹ்மான்மேற்கொண்டிருந்தார். அதன்போது தாம் எதிர்கொள்ளும் உடனடி பிரச்சினையாக இவ்வீதி புனரமைப்புவிடயம் பொறியளாளர் அப்துர்ரஹ்மானிடம் பொதுமக்கள்
சுட்டிக்காட்டி இருந்தனர். இவ் வீதியின் ஊடாக மட்டக்களப்புக்கு சென்று வருகின்ற பஸ் சேவைஇவ்வீதியின் மேசமான நிலை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் இப்பிரதேசத்தில் வாழும்தமிழ்-முஸ்லீம் ஏழை மக்கள் மிகுந்த சிரமத்தை எதிர் கொள்ளுவதாகவும் தெரிவித்த பொதுமக்கள்,இதற்கான ஒரு உடனடித்தீர்வை பெற்றுத்தருமாறு பொறியளாளர் அப்துர் ரஹ்மானிடம் கோரிஇருந்தார்கள்.
இது தொடர்பில் உடனடி கவனம் செலுத்தப்படும் என அம்மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிக்குஅமைவாக கடந்த 23ம் திகதி வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளை நேரில் சந்தித்தஅப்துர்ரஹ்மான் இவ்வீதியை அவசரமாக புணரமைத்து தருமாறு கோரியிருந்தார். இதற்கிணங்க RDAபொறியளாளர்களை அழைத்து வந்து இவ்வீதியின் நிலவரங்களை காண்பித்ததை தொடர்ந்தே தற்போதுபதுறியா வீதி முதற்கட்டமாக செப்பனிடப்பட்டுகிறது.