நிந்தவூர் நலன்புரிச் சபையின் சமூகசேவை மற்றும் சமூக நலன்புரி பிரிவினரின் ஏற்பாட்டில் புனித ரமழானை முன்னிட்டு சமுர்த்தி உதவி பெறும் 100 குடும்பங்களுக்கு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் இலவச நீர் இணைப்பினை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவரும், ஓய்வு பெற்ற முன்னாள் மாகாண கல்விப்பணிப்பாளருமான எம்.எச். யாக்குப் ஹசன் தெரிவித்தார்.
மேலும் குறிப்பிட்ட நீர் இணைப்பினை எதிர்வரும் புனித ரமழானிற்கு முன்னர் சமுர்த்தி உதவி பெறும் 100 குடும்பங்களுக்கு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை நிந்தவூர் நலன்புரிச்சபையானது இஸ்லாமிய முறையிலான நிதி நடைமுறையொன்றினை நிந்தவூரில் நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றதும் குறிப்பிடத்தக்கதாகும்.