ஹாசிப் யாஸீன்-
நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டமக்களுக்கு உதவும் பொருட்டு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், மெஸ்றோ நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் ஏற்பாட்டில்முஸ்லிம், கல்வி, சமூக ஆய்வுகள் நிறுவனத்தினால் (மெஸ்றோ) 10 லட்சம் ரூபா நிதியினைகையளித்து வைக்கும் நிகழ்வு இன்று (28) சனிக்கிழமை கொலன்னாவ ஜூம்ஆப் பெரியவாசலில் இடம்பெற்றது.
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், மெஸ்றோ நிறுவனத்தின் ஸ்தாபகத்தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் மெஸ்றோ நிறுவனத்தின்தவிசாளரும், டுபாய் அட்லான்டிக் பெற்றோலிய நிறுவனத்தின் முகாமைத்துவப்பணிப்பாளருமான ஷெய்க் நாசிம் அஹமட் ஆகியோர் குறித்த நிதியினை கொலன்னாவஜூம்ஆப் பெரிய வாசல் தலைவரும், வெள்ளம்பிட்டி, கொலன்னாவ அனர்த்த நிவாரண குழுத்தலைவருமான ஹனீப் ஹாஜி தலைமையிலான குழுவினரிடம் கையளித்து வைத்தனர்.
இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் அப்துல் ஹை,மெஸ்றோ நிறுவனத்தின் உதவிச் செயலாளர் ஏ.ஜின்னா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.