அதாஉல்லாவினால் மீண்டும் அக்கரைப்பற்றுக்கு 16.5 கிலோமீற்றர் காபட் வீதிகள்..!

அபூ பலாஹ்-
சிய அபிவிருத்தி வங்கியின் நிதியொதுக்கீட்டின் கீழ் கிழக்கு மாகாணசபைக்கு வழங்கப்பட்டிருக்கும் 400 கிலோ மீற்றர் உள்ளக காபட் வீதிகள் 2017 இல் ஆரம்பித்து மூன்றுவருட அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்றுக்கு 16.5 கிலோமீற்றர் வழங்கப்பட்டுள்ளது. 

இவ்வீதிகள் மாநகர சபையின் உள்ளக வீதிகள் காபட் வீதிகளாக 8.5 கிலோ மீற்றரும் அக்கரைப்பற்று பிரதேச சபையின் உள்ளக வீதிகள் காபட் வீதிகளாக புனரமைக்க 8 கிலோ மீற்றரும் புனரமைக்க ஒதுக்கப்பட்டுள்ளமை அக்கரைப்பற்றுக்கு கிடைத்த வரப்பிரசாதமே என்று தெரிவிக்கப்படுகிறது. 

ஏன் என்றால் அம்பாறை மாவட்டத்தின் எல்லைக்குள் அதிகளவிலான 16.5 கிலோமீற்றர் வீதிகள் அக்கரைப்பற்றுக்கு வழங்கப்பட்டுள்ளமை முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்வின் திறமையினால் கிடைத்தவையே எனவும் அதற்காக அமைச்சர் அதாஉல்லாவுக்கு இளைஞர் அமைப்பினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -