புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற செல்வதற்காக வழங்க முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தில் 4,600 பேர் பதிவு செய்திருந்த போதிலும் 1,710 பேர் மட்டுமே மீள் பதிவு செய்துகொண்டுள்ளதாக திணைக்கள பணிப்பாளர் எம்.எச்.எம். சமீல் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இவ்வாண்டு ஹஜ்ஜுக்காக பதிவு செய்துள்ளவர்கள் தமது பெயரை மீள்பதிவு செய்துகொள்ள எதிர்வரும் 22 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்குவதற்கு முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இம்முறை இதுவரை 2240 பேருக்கே ஹஜ் கோட்டா கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதுவரை மீள் பதிவு செய்யாதவர்கள் மீண்டும் பதிவு செய்ய இதனை அதிகம் பகிர்ந்து தெரியப்படுத்துவோம்...
இதுவரை மீள் பதிவு செய்யாதவர்கள் மீண்டும் பதிவு செய்ய இதனை அதிகம் பகிர்ந்து தெரியப்படுத்துவோம்...