சம்மாந்துறையில் 2 ஹொட்டல்களை மூடிய நீதிமன்றம் - மக்கள் அவதானம்

ஏ.ஜே.எம்.ஹனீபா,யு.எல்.எம். றியாஸ்-

பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்த சம்மாந்துறைப் பிரதேசத்திலுள்ள இரண்டு பிரதான ஹொட்டல்களை மறு அறிவித்தல் வரும் வரை மூட சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் கட்டளை பிரப்பிப்பு கைப்பற்றப்பட்ட பாவனைக்கு உதவாத பொருட்களை அழித்துவிடவும் உத்தரவு.

சம்மாந்துறை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எம்.எம்.எம்.சபீர் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஹொட்டல்கள், இறைச்சிக் கடைகள், மரக்கறி விற்பனை நிலையங்கள், பொதுச்சந்தை என்பன நேற்று (05) மாவட்ட மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் பீ.பேரம்பலம் தலைமையிலான பொதுச் சுகாதார பரிசோதகர் குழுவினர் பரிசேதனை மேற் கொண்டனர்.

இப் பரிசோதனையின் போது இனங்கானப்பட்ட மனித பாவனைக்கு உதவாத 80 கிலோ மாட்டிறைச்சியை விற்பனைக்கா வைத்திருந்த மாட்டிறைச்சிக் கடை உரிமையாளர்கள் மூன்று பேருக்கும், பெருமளவிலான பாவனைக்கு உதவாத பழுதடைந்த உணவுப் பொருட்கள், பாவித்த என்னை,சமைப்பதற்கு பொருத்தமற்ற பாத்திரங்கள் என்பவற்றோடு இயங்கிய நான்கு ஹோட்டல் உரிமையாளர்களுக்கு எதிராகவும் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் நேற்று வழக்கு தாக்கல் செயப்பட்டது.

சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளன அத்துடன் இந்த இடங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட மக்களின் பாவனைக்கு உதவாத பொருட்களை அழித்துவிடுமாறும் அதிகாரிகளுக்கு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதவான் எச்.எம்.எம்.பஸீல் உத்தரவிட்டார்.

இம் முற்றுகையின் போது பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களையும், அசூத்தமான பாத்திரங்கள் மற்றும் எண்ணை வகைகளைப் பயன்படுத்திய சம்மாந்துறையிலுள்ள இரண்டு பிரதான ஹொட்டல்களை மறு அறிவித்தில் வரும் வரை மூட கட்டளை பிரப்பித்துள்ளார்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -