ஹாசிப் யாஸீன்-
தேசிய ஊர் கடந்து ஓடுதல் விளையாட்டுப் போட்டி – 2016 (National Cross Country Championship - 2016) நேற்று (07) சனிக்கிழமை நுவரெலியா குதிரைப் பந்தய மைதானத்தில் இடம்பெற்றது.
விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்போட்டி நிகழ்வுக்குவிளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு போட்டிநிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வுக்கு விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் டி.எம்.ஆர்.வி. திஸாநாயக்க,விளையாட்டு அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் கே.டி.எஸ்.ருபன் சந்திரஉள்ளிட்ட விளையாட்டு அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
தேசிய ஊர் கடந்து ஓடுதல் விளையாட்டுப் போட்டி (National Cross Country Championship)நிகழ்வுக்கு நாட்டின் 9 மாகாணங்களிலிருந்தும் வீர, வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இதன்போது ஆண், பெண் வீரர்களுக்கிடையே 10 ஆயிரம் மீற்றர் உள்ளிட்ட மெய்வல்லுனர்போட்டிகள் இடம்பெற்றன.
இறுதியாக இடம்பெற்ற போட்டி நிகழ்வுகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிக்கும்நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டுவெற்றி பெற்ற வீர, வீராங்கனைகளுக்கு பதக்கம் அணிவித்து, சான்றிதழ் மற்றும் வெற்றிக்கிண்ணங்களை வழங்கி வைத்தார்.