புறா பிரச்சினையின் காரணமாக 22 வயது இளைஞர் மரணம்...!

இக்பால் அலி-
பொல்கஹவெல பொலிஸ் பிரிவில் தெல்கொல்லப் பகுதியில் புறா பிரச்சினையின் காரணமாக தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமுற்ற 22 வயதுடைய இளைஞர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் மரணம் இன்று 03-05-2016 அடைந்துள்ளார்.

பொல்கஹவெல சவூதி மாவத்தையிலுள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிபுரியும் 22 வயதுடைய எம்.ஆர்.எம்.ரிப்கான் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

நேற்று 2-05-2016 2.00 மணி அளவில் தம்பியினுடைய புறா காணாமற் போனதாகவும் புறா தறுவதாக் கோரி தொலைபேசி அழைப்பு வந்ததை அடுத்து தெல்கொல்ல என்ற இடத்திற்கும் தம்பியும் உயிரிழந்த இளைஞரும் இன்னும் இரு இளைஞர்களுடன் சென்றுள்ளனர். அங்கு இரு தரப்பினருக்கிடையே இடம்பெற்ற வாய்த் தர்க்கத்தினால் ஏற்பட்ட சம்பவத்தின் போதே இந்த இளைஞர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். 

இதைக் கண்ட அக்கம் பக்கத்தவர்கள் பொல்கஹவெல மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு வந்து அனுமதித்துள்ளனர். அதன் பின்னர் அங்கிருந்து எடுத்து வந்து அவசர சிகிச்சைக்காக குருநாகல் போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளார். 

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொல்கஹவெல பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.

இதேவேளை பொல்கஹவெல மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள் கூடிய கவனம் செலுத்த வில்லை என பிரதேசவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதனை எதிர்த்து ஜனாஸா நல்லடக்கத்தின் போது எதிர்ப்பு அமைதி ஊர்வலம் செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -