நல்லாட்சி அரசின் ஊடக அமைச்சினால் முதலாவது தொகுதி 25 ஊடகவியலாளா்களுக்கு மோட்டாா் பைசிக்கள்





அஸ்றப் ஏ சமத்-

ல்லாட்சி அரசின் ஊடக அமைச்சினால் கடந்த வருடம் ஊடகவியலாளா்களுக்கு மோட்டாா் பைசிக்கல் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் முதலாவது தொகுதி 25 ஊடகவியலாளா்களுக்கு மோட்டாா் பைசிக்கள் வழங்கி இத் திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
 
இந் நிகழ்வு இன்று (13)ஆம் திகதி இலங்கை தொலைக்காட்சி பயிற்சி நிலையத்தில் ஊடக அமைச்சா் கயந்த கருநாதிலக்க தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக நிதி அமைச்சா் ரவி கருநாயக்கக கலந்து கொண்டாா்.

ஊடகவியலாளா்கள் மோட்டா் பைசிக்களை கொள்வனவு செய்வதற்காக 2 இலட்சம் ருபா 2 வீத வட்டிக்கு 2 வருட காலத்திற்குள் அறவிடக் கூடியதாகம் மாதாந்தம் 5 ஆயிரம் ருபா செலுத்தக் கூடிய முறையில்
கூடிய வகையில் குறைந்த வட்டியிலான மோட்டாா் பைசிக்கள் வழங்கும் திட்டம அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இக் கடனை மக்கள் வங்கி ஊடாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. . இக் கடனின் மிகுதி 7 வீதத்தை
திரைசேரி மூலம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது.தெரிபு செய்யப்பட்ட 25 பிராந்திய ஊடகவியாளா்களே இன்று மோட்டாா் பைசிக்கள் களை பெற்றுக் கொண்டனா்.

இங்கு உரையாற்றிய ஊடக அமைச்சா் கயாந்த கருநாதிலக்க -

இந்த நல்லாட்சி அரசாங்கம பதவிக்கு வந்த பிறகு இந்த நாட்டில் ஊடகச் சுதந்திரம் பரிபுரணமாக வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில் ஊடகங்களுக்கும், ஊடகவியலாளா்களுக்கும் சுதந்திரம் இருக்க வில்லை. ஊடகவியலாளா்கள் கொல்லப்பட்டா்கள், ஊடகவியலாளா்களினை தடி குண்டாக்கள் சென்று அடித்து தாக்கினாா்கள் சிலரை கடந்தினாா்கள். ஊடகவியலாளா்கள் சிலா் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்குச் சென்று வாழ்ந்தாா்கள் கடந்த காலத்தில் அரசுக்கு எதிராக செய்தி தலையங்கம் தீட்டும் ஊடகவியலாளா் அப் பதவியில் இருந்து துாக்கி எறியப்பட்டா்கள். அந்த யுகம் தற்போதைய ஆட்சியில் இல்லை. உலகில் உள்ள 180 நாடுகளில் ஊடகவியலாளா்களுக்கு பங்கம் விளைவிக்கும் நாடுகளில் இலங்கை 165ஆவது இடத்தில் 2014ஆம் ஆண்டில் இருந்தது. தற்பொழுது 140வது இடத்திற்கு இலங்கை வந்துள்ளது. இந்த ஆட்சியில் ஊடகவியலாளா்களது நன்னோக்கு வேலைத்திட்டத்தில் அவா்களுக்கு வீடு வழங்குதல் , உபகரணங்கள் வழங்குதல், மோட்டாா் பைசிக்கள் வழங்குதல் போன்ற வேலைத்திட்டங்கள எமது அமைச்சு நடைமுறைப்படுத்தியுள்ளது. வீடமைப்புத்திட்டத்தினை நிர்மாணிப்பதற்கும் நிதியமைச்சரின் உதவியை நாடியுள்ளோம். எனக் கூறினாா். நிதியமைச்சா் ரவி கருநாயக்கவும் நானும் கொழும்பு ரோயல் கல்லுாாியில் ஒரு வகுப்பு மாணவா்களாக நீண்ட நண்பா்களாக இருந்து வந்துள்ளோம். எனவும் ஊடக அமைச்சா் ஜயந்த கருநாதிலக்க உரையாற்றினாா்.

நிதி அமைச்சா் ரவி கருநாயக்க உரையாற்றுகையில் -

கடந்த வாரம் பத்திரிகை ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவா்கள் தெரிவித்துள்ளாா் - இந்த அரசாங்கம் பொருந்திய பொருளாதார வாழ்க்கைச் சுமையை எமது அரசாங்கம் மக்களது சுமையில் செலுத்தியுள்ளாா்கள் எனத் தெரிவித்துள்ளாா். அவா் இந்த நாட்டை விட்டுச் செல்லும்போது. - 45 வீதமான பாரிய கடன்களை உலக நிறுவனங்களிடம் பெற்றிருந்தாா். உதாரணத்திற்கு ஹம்பாந்தோட்டை துறைமுகம் 2002 மில்லியன்கள் செலவலிக்கப்பட்டது. அதில் இருந்து கடந்த ஆண்டு 200 மில்லியன் ருபாவே இலாபம் கிடைத்தது. ஆனால் இத்திட்டத்திற்காக வட்டியுடன் பாரிய தொகை ன் செலுத்துகின்றோம். அந்த திட்டத்தினால் வருமானம் இல்லை. அவா்களது காலத்தில் அத்தியவசியப் பொருட்களின் விலைகலும் எமது விலைகளையும் ஒப்பீட்டு பாருங்கள் -

பெற்றோல் - 165 ருபா தற்பொழுது 117 ருபா
டீசல் - 130 95
பால் 1 கிலோ 940 ருபா ” 810 ருபா
எரிவாயு 2650 ” 1350
சீனி 116 ” 89


இந்த அரசாங்கம் அரச ஊழியா்களுக்கு 10ஆயிரம் ருபா சம்பளத்தினை அதிகரித்துள்ளோம். மஹிந்த ்ராஜபக்ச 9095 பில்லியன் ருபாக்களை கடணாக எடுத்திருந்தாா். அக் கடனை அடைக்கவே 9 வீத வட் வறியை அறிமுகப்படுத்தியுளளோம். . இதனை இன்னும் ஒன்றறை வருடங்கள் முடிந்த பிறகு இந்த நாட்டில் பொருளாதாரத்தினை ஒரு அளவுக்கு சாதாரண நிலைக்கு கொண்டு வரமுடியும். மகிந்த ராஜபக்சவின் காலத்தில் சுங்க திணைக்களம் கடந்த 2014ஆம் ஆண்டு 2000 மில்லியன் தற்பொழுது சுங்கத்திணைக்களத்தின் வருமானம் 13500 மில்லியன்களாகும் 6 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. கடந்த காலங்களில் சுங்கத்தீா்வையும் அதற்குரிய வருமாணங்களையும் தமக்கு வேண்டியவா்களுக்க ஏற்ற மாதிரி தொலைபேசி ஊடாக அதனை செலுத்தாமல் அந்த பொருட்களை வெளியே எடுத்து இந்த நாட்டிற்குரிய வருமாணங்களை சீரலிதாா்கள் அந்த பணம் அவா்களது கைப்பைக்குள் சென்றிருக்கின்றது தற்பொழுது இதற்காக கடமையில் இருந்த அரச அதிகாரிகள் எப்.சி.டி.யில் பைல்களுடன் அலைந்து திரிகின்றனா். . வெளிநாட்டில் இருந்து வரும் முதலீட்டாளா்களை அவா்களது முதலிட வரும் நிதியில் இருந்து கமிசன் வாங்கியதால் அவா்கள் கடந்த காலங்களில் இநத நாட்டில் முதலிட அச்சம் கொண்டாா்கள். இந்த ஆட்சியின் சீரிய பொருளாதத்தினை கண்டு தற்போதையமுதலீட்டாளாகள் இங்கு முதலிட வருகின்றாா்கள்.
 
ஆகவே இன்னும் ஒன்றரை வருடத்திற்குள் இந்த நாட்டின் சீரிய பொருளாதார நிலமை சீராகிவிடும் அதற்காக பொருமை காக்க வேண்டும் எனவும் நிதியமைச்சா் ரவி கருநாயக்க தெரிவித்தாா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -