இக்பால் அலி-
முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் எகிப்திய இஸ்லாமிய விவகாரங்களுக்கான உயர் சபையின் அஸ்காப் அமைச்சின் விசேட அழைப்பில் பேரில் நாளை 12 திகதி எகிப்து நாட்டுக்கு புறப்படவுள்ளார்.
எகிப்திய இஸ்லாமிய விவகாரங்களுக்கான உயர் சபையின் அஸ்காப் அமைச்சின் ஏற்பாட்டில் சவால்களை எதிர் கொள்வதில் அரபு இஸ்லாமிய உலகில் மார்க்க நிறுவனங்களின் பங்கு – சுய விமர்சனமும் தலைப்புக்கான ஆய்வும் எனும் தொனிப் பொருளில் எகிப்து நாட்டில் மே மாதம் 14, 15 ஆம் திகதிகளில் 26 வது பொது மாநாடு இடம்பெறவுள்ளது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுவதற்காக அழைப்பு விடுப்பட்டுள்ளதை முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் அவர்களுடன் அமைச்சரின் சிரேஷ்ட ஆலோசகர் ஏ.சீ.எம். பாரூக் அவர்களும் கலந்து கொள்ளவுள்ளார்.