பத்திரிகையுலக ஜாம்பவான் எஸ்.டி.சிவநாயகம் அரங்கில் இடம்பெற்ற வகவத்தின் 27வது கவியரங்கு..!

லம்புரி கவிதா வட்டத்தின் 27வது கவியரங்கு 21-04-2016 அன்று கொழும்பு அல் ஹிக்மா கல்லூரியில் பத்திரிகையுலக ஜாம்பவான் எஸ்.டி.சிவநாயகம் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வுகளுக்கு வகவத் தலைவர் என்.நஜ்முல் ஹுசைன் தலைமை தாங்கினார். பிரதம அதிதியாக வகவ ஸ்தாபக உறுப்பினரில் ஒருவரும் எஸ்.டி.சிவநாயகம் அவர்களின் பண்ணையில் வளர்ந்த பிரதானமானவர்களில் குறிப்பிடத்தக்கவருமான கலாபூஷணம், சத்திய எழுத்தாளர் எஸ்.ஐ.நாகூர் கனி கலந்து சிறப்பித்தார்.

எம்மைவிட்டுப் பிரிந்த எஸ்டி.சிவநாயகம் அவர்களின் துணைவியார் மங்களாவதி சிவநாயகம், வகவ கவிஞர்கள் கம்மல்துறை இக்பாலின் தாயார், தமிழ்த்தென்றல் அலி அக்பரின் மைத்துனர் முஹம்மது இல்யாஸ், கே.விஜயன் ஆகியோர் நினைவுகூரப்பட்டனர்.

சிறப்புரையாற்றிய சத்திய எழுத்தாளர் எஸ்.ஐ.நாகூர் கனி அவர்கள் ' 1966 ல் 'தவஸ' பத்திரிகை காரியாலயம் தொடங்கிய நான் முதல் அவர் இறக்கும்வரை அவருடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்திருக்கின்றேன். எமது வலம்புரி கவிதா வட்டம் ஆரம்பிக்கப்பட்ட வேளையிலே மிகவும் மகிழச்சியடைந்த ஒருவர். கவிதைக்காக ஆரம்பிக்கப்பட்ட எமது வகவம் சிறப்புற நடைபெறவேண்டும் என மானசீகமாக விரும்பினார். பல ஆலோசனைகளை சொல்லியுமிருக்கிறார்.

தனது கொள்கையிலிருந்து யாருக்காகவும், விட்டுக்கொடுக்காதவராகவும் எந்த அரசியல்வாதிக்கும் அடிபணியாதவராகவும் எஸ்.டி.சிவநாயகம் அவர்கள் விளங்கினார். அவர் கர்வம் கொண்டவர் என்று பலர் நினைத்துக் கொண்டிருந்தாலும் உண்மையில் அவர் அவ்வாறான ஒருவரில்லை. மிகவும் உயரிய பண்புகள் கொண்ட ஒருவராகவும், பிறருக்கு உதவும் நல்ல உள்ளங்கொண்டவராகவும் திகழ்ந்தவர். 

ஒரு பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும் அதே நேரம் அந்நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் திகழ்ந்த ஒரே ஒருவர் சிவநாயகம் ஐயா அவர்கள்தான். முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் 'இலங்கையிலிருக்கும் பேனா மன்னர் எஸ்.டி.சிவநாயகம் போல் எழுதக்கூடியவரை தமிழ்நாட்டிலும் நான் காணவில்லை' என்று போற்றி புகழ்ந்திருக்கிறார். நம்நாட்டின் இலக்கியவாதிகளை உருவாக்குவதிலே அவர் பெருந்தொண்டாற்றியுள்ளர். 

'சிந்தாமணி' பத்திரிகையின் மூலம் மிகவும் சிறப்பான மரபுக் கவிஞர்களை அவர் உருவாக்கினார். அவ் வரிசையிலே மிகவும் முக்கியமானவர் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன். அவரிடம் பணிபுரிந்த எல்லோருமே வேறு நிறுவனங்களில் உயர்பதவிகள் பெற்று இப்போதும் சிறப்புடன் இருக்கிறார்கள்' என்று கூறினார்.

‘‘எஸ்.டி.சிவநாயகம் அவர்கள் 50களில் ‘சுதந்திரன்’ பத்திரிகைக்கு ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில், இன்று பிரபலமாக பேசப்படும் பல முற்போக்கு எழுத்தாளர்களுக்கு களம் அமைத்து கொடுத்தவர்’’ என எஸ்.டி.சிவநாயகம் அவர்கள் பற்றிய முக்கியமான ஒரு குறிப்பினை முன் வைத்தார் மேமன்கவி.

கவியரங்கம் கவிஞர் வெளிமடை ஜஹாங்கீர் தலைமையில் கலகலப்பாக நடைபெற்றது. கவிஞர்கள் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன், எம். பிரேம்ராஜ், போருத்தொட்ட ரிஸ்மி, கம்மல்துறை இக்பால், க.லோகநாதன், சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ், ச. தனபாலன், ஈழகணேஷ், கவிக்கமல் ரஸீம், இளநெஞ்சன் முர்ஷிதீன், தமிழ்த்தென்றல். அலி அக்பர், எம்.எஸ்.அப்துல் லத்தீப், எம்.ஏ.எம்.ஆறுமுகம், புல்மோட்டை யாசீர் எம்.அனீபா, பாணந்துறை எம்.பி.எம். நிஸ்வான், நாச்சியாதீவு பர்வீன், அட்டாளச்சேனை எஸ்.எல்.மன்ஸூர், கலாபூஷணம் மஸீதா அன்ஸார், கவிநேசன் நவாஸ், மேமன்கவி ஆகியோர் கவியரங்கில் கலந்து கொண்டனர்.

உடுவை தில்லை நடராஜா, ஏ.பீர் முஹம்மத், டாக்டர் தாஸிம் அகமது, த. மணி, அஷ்ரப் சிஹாப்தீன், எம்.எஸ்.எம்.ஜின்னா, சமூகஜோதி ரபீக், கல்லொளுவ பாரிஸ், எம்.எம்.ரூமி, பஸ்லி ரூமி பெரோஸ், நூருல் அயின் நஜ்முல் ஹுசைன், ராலிஹா ரூமி, அஸீஸ் நிஸார்தீன், எம்.எம்.பாஸில், எம்.எஸ்.தாஜ்மஹான், வெலிப்பன்னை அத்தாஸ், இப்னு அஸூமத், எம்.எச்.எம்.நவ்சர், ஏ.எம்.எஸ்.உதுமான், உவைஸ் ஷரீப் போன்றோர் சபையை அலங்கரித்தனர்.

மே மாதம் 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் வலம்புரி கவிதா வட்டத்தின் ஆண்டு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -