கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 29 மருந்தகக் கலவையாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை

சப்னி

சுதேசத துறையில் 2014, 2015ஆண்டு காலப்பகுதியில் மூன்றரை மாதம் மருந்தக் கலவையாளர் பயிற்சியை பூர்த்தி செய்து வெளியேறிய கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 29 மருந்தகக் கலவையாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை நாளை மறுதினம் 19 ஆம் திகதி வியாழக்கிழமை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் நடைபெறும் என சுகாதார சுதேச, சமூக நலன்புரி மற்றும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் உதவிச்செயலாளர் ஜே.ஹூசைனுதீன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ தினைக்களத்தில் மருந்தகக் கலவையாளர் பதவிக்கு தகுதி வாய்ந்தவர்களை தெரிவு செய்வோருக்கான இந்த நேர்முகப்பரீட்சை வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

மேலும், கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 08பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 16பேரும், திருகோணாமலை மாவட்டத்தை சேர்ந்த 05பேரும் இந்த நேர்முகப் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். இலங்கையில் முதல் முறையாக தமிழ் மொழி மூல மருந்தக்கலவையாளர் பயிற்சி நெறியை கடந்த 2013.11.29ஆம் திகதிலிருந்து மூன்று மாத காலம் பயிற்சி நெறியை மூடி வெளியேறியவருக்கே இந் நேர்முகப்பரீட்சை இடம்பெறவுள்ளது.

இந்த நேர்முக பரீட்சைக்கு தோற்றுகின்றவர்கள் தங்களது தேசிய அடையாள அட்டை, முதல் நியமனக்கடிதம், சேவையில் உறுதிப்படுத்தப்பட்ட கடிதம், கல்விச் சான்றிதழ்கள் (க.பொ.த (சா/த), க.பொ.த(உ/த)), மருந்தகக்கலவையாளர் மூன்று மாத பயிற்சி நெறி சான்றிதழ், குறித்த நிருவனத்தின் தலைவரிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட அறிக்கை என்பவற்றுடன் இவ் நேர்முகப்பரீட்சைக்கு சமூகமளிக்க வேண்டும் என அமைச்சின் உதவிச்செயலாளரினால் எழுத்து மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -