க.கிஷாந்தன்-
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வோர்க்கஸ் வீடமைப்பு திட்டத்திலுள்ள வீடொன்றின் மலசலகூட கழிவுகளை ஏற்ற சென்ற டிராக்டர் 30 அடி பள்ளத்தில் குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்து 07.05.2016 அன்று மு.ப - 11-45 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
குறித்த டிராக்டர் வீட்டு மலசல கூட கழிவுகளை ஏற்றிய பின்பு சாரதியால் டிராக்டரை திருப்ப முனையும் போது வாகனம் தனது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
சாரதியின் கவனயீனத்தாலே இவ்விபத்து நேர்ந்ததாக நேரில் கண்டோர் தெரிவித்தனர். ஏனெனில் வாகனத்தை திருப்ப போதிய இடவசதி இல்லாத இடத்திலேயே டிராக்டரானது திருப்பப்பட்டுள்ளது.
இவ்விபத்தினால் உயிர் சேதங்கள் இல்லாத போதிலும் மரங்கள் இரண்டின் உதவியுடன் பிராக்டர் தடுக்கப்பட்டுள்ளது.
இல்லையேல் கீழுள்ள குடியிருப்பின் மீதே டிராக்டர் விழுந்து பாரிய சேதத்தை உண்டுபன்னியிருக்கும்.
விபத்து தொடர்பாக தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.