மூதூர் அல்-நூரியா குர்ஆன் மதரஸாவின் 40 வது ஆண்டு விழா

றிசாத் ஏ காதர்-
அல்லாஹ்வுடைய கலாமையும், நபி (ஸல்)அவர்களின் வாழ்க்கை வழிக்காட்டலையும் கற்றுபின்பற்றுவதற்க்கானஆரம்ப தளமே குர்ஆன் மதரஸாக்களாகும் .என சட்டத்தரணி ஜே.எம்.லாகீர் தெரிவிப்பு

மூதூர் நூரியா குர்ஆன் மதரஸாவின் 40 வது ஆண்டு நிறைவு விழா நேற்று 27.05.2016 (வெள்ளிக்கிழமை) தக்வாநகர்ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் மதரஸாவின் அதிபர் அஷ்ஷேஹ் கௌதர் மௌலவி தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறுதெரிவித்தார்

மேலும்,அவர் உரையாற்றும் போது ,

இம் மத்ரஸாக்களை சரியாக நெறிப்படுத்தி இச்சமூகத்தில் இதன் வளர்ச்சியினை மேம்படுத்த வேண்டியது நம்எல்லோருடைய கடமையாகும். இன்று நமது சமூகத்தில் உலகத்தேவைக்கான கல்விக்கு காட்டுகின்ற ஆர்வம்மார்க்கக்கல்வி விடயத்தில் அரிதாகக்காணப்படுவதனையிட்டு வேதனை அடையவேண்டியுள்ளது, எனசட்டத்தரணியும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஜே.எம்.லாகீர் தெரிவித்தார் . தொடர்ந்தும்உரையாற்றுகையில்

அல்லாஹ்வுடைய கலாமையும், நபி (ஸல்)அவர்களின் வாழ்க்கை வழிக்காட்டலையும்இரண்டையும்சிறுபாரயத்திலே கற்று மனனமிட்டு சமூகத்தின் முன்மாதிரிமிக்க வாழ்க்கையை பின்பற்றமதரஸாக்களே வழி சமைக்கின்றது எனக் குறிப்பிட்டார். அந் நூரியா மதரஸாவை பொறுத்த வரை 40 ஆண்டுகள்இவ்வரும்பணியை மிக்க சிரமத்திற்கு மத்தியில் செய்துவருவதனை பாராட்டாமல் இருக்கமுடியாது இதனுடைய40வது வெளியீடாகவே இக்குழந்தைகள் கற்றுத்தேர்ந்து இன்றுபட்டம் பெற்று வெளியேறுகின்றனர். வெளியேறுகின்றஅனைத்து மாணவ, மாணவிகளையும் வாழ்த்துவதோடு இதற்க்கு பங்களிப்பு செய்த பெற்றோர்களையும், நலன்விரும்பிகளையும் ,இம்மதரஸாவின் உலமாக்களையும், தக்வாநகர் ஜும்மா பள்ளி நிருவாகத்தினர் இப்பகுதிவாழ்மக்களுக்கும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன் எனவும் தெரிவித்தார்

கற்றுத்தேர்ந்து வெளியேறுகின்ற அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் சட்டத்தரணியும் கிழக்கு மாகாண சபைஉறுப்பினருமான ஜே.எம்.லாகீர் பரிசில்களையும் விருதுகளையும் வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -