அக்குறணையில் அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத்தின் 49ஆவது இஜ்திமா...!

சாய்ந்தமருது எம்.எஸ்.எம்.சாஹிர்-
கில இலங்கை தௌஹீத் ஜமாஅத்தின் 49ஆவது இஜ்திமா, பண்பாட்டு எழுச்சி மாநாடு எதிர்வரும் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை அக்குறணை 07 இல் அமைந்துள்ள அரபா திருமண மண்டபத்தில் இடம் பெறவிருக்கிறது.

அக்குறணை முஸ்லிம் இளைஞர் அமைப்பு, அக்குறணை தௌஹீத் ஜமாஅத் மற்றும் அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத், ஜம்மியத்துல் ஸபாப்வின் ஏற்பாட்டில், அஷ்ஷெய்க் நாளிர் ஜுனைதீன் (ஹாமி) தலைமையில் இடம் பெறவிருக்கும் இந்நிகழ்வில், பிரபல மார்க்க சொற்பொழிவாளர்களான அஷ்ஷெய்க் அன்ஸார் ஹுஸைன் (பிர்தௌஸி) - வழி கெட்ட ஷியாக்களும் முஃதஸிலாக்களும் எனும் தலைப்பிலும் அஷ்ஷெய்க் ஏ.கே.எம். ரமீஸ் (ரியாதி) - முதியோர் இல்லத்தை நோக்கி எமது சமூகம் எனும் தலைப்பிலும் அஷ்ஷெய்க் ஆதில் ஹஸன் - இன்றைய இளைஞர்களே நாளைய தலைவர்கள் எனுத் தலைப்பிலும் அஷ்ஷெய்க் ஸனா MISC - மாநாடு ஏன்? என்ற தலைப்பிலும் உரையாற்றவுள்ளனர்.

இம் மாநாட்டில் கலந்து கொள்ள பெண்களுக்கும் விசேட இடம் ஒதுக்கப்பட்டுள்ளதால் அனைத்துப் பெண்களும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -