ஹைதர் அலி -
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியில் கிழக்கு மாகாணத்தில் சுமார் 600 கிலோமீட்டர் வரையான காபட் வீதிகள் இடபப்டவுள்ளன. இவ் வீதிகள் கிழக்கு மாகாண முதலமைச்சின் கீழுள்ள உள்ளூராட்சி சபைகள் மற்றும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைகளம் ஊடாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
இவ்வீதிகள் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைகளத்தின் ஊடாக சுமார் 200 கிலோமீட்டர் வீதிகளும், மிகுதி 400 கிலோமீட்டர் கிழக்கு மாகாண முதலமைச்சின் கீழுள்ள உள்ளூராட்சி சபைகள் ஊடாகவும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அந்த வகையில் கிழக்கு மாகாண முதலமைச்சின் கீழுள்ள உள்ளூராட்சி சபைகளினூடாக 175கிலோமீட்டர் வீதி அம்பாறை மாவட்டத்திலும் 125 கிலோமீட்டர் வீதி மட்டக்களப்பு மாவட்டத்திலும் மற்றும் 100 கிலோமீட்டர் வீதி திருகோணமலை மாவட்டத்திலும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
இது தொடர்பான கலந்துயைாடல் கிழக்கு மாகாண முதலமைச்சரின் அழைப்பின் பேரில் 09.05.2016ஆந்திகதி காலை 10.30 மணியளவில் முதலமைச்சரின் காரியாலயத்தில் மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி, மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலப்பத்தி, மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.எம். அன்வர், லாகிர், நாகேஸ்வரன், ஜெனர்தணன் மற்றும் முதலமைச்சரின் செயலாளர் அசீஸ், திருகோணாமலை மாவட்டத்திலுள்ள அணைத்து உள்ளூராட்சி சபைகளின் செயலாளர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டு புனரமைக்க வேண்டிய வீதிகளை தெரிவு செய்து அமுல்ப்படுத்தும் படி பணிப்புரை வழங்கபட்டது.
01. நகராட்சி மன்றம் திருகோணமலை
02. நகராட்சி மன்றம் கிண்ணியா
03. பிரதேச சபை கிண்ணியா
04. பிரதேச சபை பட்டினமும் சூழலும்
05. பிரதேச சபைமூதூர்
06. பிரதேச சபை குச்சவெளி
07. பிரதேச சபை தம்பலகாமம்
08. பிரதேச சபை வெருகல்
09. பிரதேச சபை கோமரன்கடவல
10. பிரதேச சபை கந்தளாய்
11. பிரதேச சபை பதிசிறிபுர
போன்ற 11 உள்ளூராட்சி சபைகளும் உள்ளடக்கப்பட்டு வீதிகள் தெரிவு செய்யபட்டன. அவற்றில்
குச்சவெளி பிரதேச சபைக்கான வீதிகள்
01. பெரிய குளம் உள்வீதி - 01 KM
02. நிலாவெளி கடற்கரை வீதி - 01 KM
03. அல்ஹம்ரா பாடசாலை வீதி - 01 KM
04. கும்புறுபிட்டி கிழக்கு உள்வீதி - 01 KM
05. செந்தூர் உள்வீதி - 01 KM
06. புடவைக்கட்டு பாடசாலை வீதி - 01 KM
07. சிங்கள மகா வித்தியால வீதி தக்வா நகர் தொடக்கம்
ரகுமான் நகரூடாக புல்மோட்டை - 01 KM
தம்பலகாமம் பிரதேச சபைக்கான வீதிகள்
01. அல் மதீனா பாடசாலை வீதி - 600 M
02. அரபிக் கல்லூரி வீதி - 600 M
03. மீரா நகர் தக்கியா வீதி - 700 M
04. புஹாரி பாடசாலை வீதி முள்ளிபோதனை - 01 KM
05. 98 பிரதான வீதி கல்மிட்டியா - 500 M
06. அஸ் சம்ஸ் வீதி முள்ளிபோதனை - 600 M
07. கொபெகடுவா வீதி முள்ளிபோதனை - 300 M
08. உள்போதுவேவ வீதி முள்ளிபோதனை - 600 M
09. சிப்பித்திடல் வீதி முள்ளிபோதனை - 600 M
10. போட்கேர்னி வீதி முள்ளிபோதனை - 01 KM
11. வைத்திய சாலை வீதி 96 கல்மிடியா - 500 M
ஆகிய வீதிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் தெரிவித்தார்.