யார் பிள்ளைக்கு எவர் பெயர் வைப்பது...?

ஓட்டமாவடி:அஹமட் இர்ஷாட் -
காத்தான்குடி நகரம் முஸ்லிம் காங்கிரசின் தாயகம் என்பதில் முஸ்லிம் காங்கிரஸ் போராலிகளிடம் மாற்று கருத்து இருக்கின்றது என்பதனை எந்த காங்கிரஸ் போராலியாலும் கருதுரைக்க முடியாது என்பதுதான் எனது தனிபட்ட கருத்தாகும்.

காத்தான்குடியின் நீண்ட கால அரசியல் வரலாறாக நான் பார்க்கும் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கூட இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு அரசியல் முகவரி கொடுத்த சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இஸ்தாபக உறுப்பினர் என்பதில் கத்தான்குடி நகரம் பெறுமைப்பட்டுக்கொள்வது என்பது அவர்களுக்கு இருகின்ற உரிமையாகும்.

இந்த நிலையிலே பாரிய அரசியல் உள்வீட்டு பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க தொடங்கும் முஸ்லிம் காங்கிரஸ் தனது இஸ்தாபக தலைவரையும் இழந்து புதியதோர் தலைமையின் கீழ் தனது அரசியல் போராட்டத்தினை நம்பிக்கையுடன் இழக்கின்றது. காலம் பதில் சொல்லும் என்பார்கள். ஆனால் காலங்கள் சொல்லும் பதிலினை இன்னும் அறிந்த பாடில்லை.

ஹிஸ்புல்லாவினால் அரசியல் அறிமுகம் பெற்று தனது தூர நோக்கு சிந்தனையின் வெளிப்பாடாக கடந்த மாகாண சபை தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு காத்தான்குடியின் நம்பிக்கையை வெள்ளுகின்றார் பொறியியலாளரும் கிழக்கு மாகான சபை உறுப்பினருமான ஷிப்லி பாரூக்.

பொறியலாளாரக இருந்தும் அதற்கப்பால் சமூக சிந்தனை, மற்றும் கடந்தகால யுத்ததினால் பாதிக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்தவன் என்ற உணர்ச்சி பூர்வமான சிந்தனையுடன் தான் ஒர் மாகாண சபை உறுப்பினர் என்ற அரசியல் பலத்தினை தன்னகம் பெற்றுக்கொள்கின்றார் ஷிப்லி பாரூக். 

இந்த நிலையில் முஸ்லிம்களுக்காக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தக்க சமயத்தில் சாதுரியமான முடிவினை எடுகின்றது. அதனோடு வந்த கடந்த ஜனாதிபதி தேர்தலில் இலங்கை வாழ் ஒட்டு மொத்த சிறுபான்மை சமூகமும் எந்த முடிவின் பக்கம் நின்றதோ அதற்கு தானும் பின் நிற்க வேண்டும் என்பதற்காக தனது அரசியல் வழிகாட்டியையும் தூக்கி வீசிவிட்ட பொறியியலாளர் ஷிப்லி பாரூக், இஹ்லாஸ் எனும் சிந்தனையின் வடிவமாக தற்போதைய கிழக்கு மாகான முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்டின் கையினை பலப்படுத்தியவாரகவே சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இணைந்து எதிர்கால சமூத்தின் துக்கத்தில் பங்குகொள்கின்ற ஓர் இளைஞனாகவே மேலும் ஷிப்லி பாருக்கினை நான் கான்கின்றேன்.

இந்த நிலையில் தனது தூர நோக்கு சமூக சிந்தனையின் வெளிப்பாடாக முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்டின் கூடிய ஒத்துழைப்புடனும் முதலமைச்சர் நசீரின் நம்பிக்கையினை வென்ற ஓர் இளம் துடிப்புள்ள மாகாண சபை உறுப்பினராக மாறுகின்றார் பொறியியலாளர் ஷிப்லி. முதலமைச்சரின் நம்பிக்கையினை வென்று அவருடைய அதிகாரத்தின் கீழ் இயங்கும் மாகாண சபை உறுப்பனர் ஷிப்லி பாருக் தான் ஹிஸ்புல்லா எனும் அரசியல்வாதியினை வைத்து எவ்வகையான சேவைகளை சமூகத்திற்கு செய்தாரோ அதை விடவும் அதிகாமான சேவைகளை செய்துவரும் காத்தான்குடின் எதிர்கால தலைவன் என்பதில் என்னிடம் எவ்வித மாற்றுக்திற்கும் இடமில்லை என்பதே எனது முடிவாக இருக்கின்றது.

இந்த நிலையில் உயர்பீட உறுப்பினர், கொள்கை பரப்பு செயலாளர், பிரதேசத்தின் முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு தலைவர் என்றெல்லாம் தன்னை அறிமுகப்படுத்துக் கொள்ளும் நபரானவர் புதிதாக கட்சிக்குள் உறுப்பினர்களை உள்வாங்குதற்கு முட்டுக்கட்டையாக இருப்பதனை அண்மை காலமாக அவதானிக்க கூடிய முக்கிய விடயமாகவே இருக்கின்றது. 

பொறியியலாளர் ஷிப்லி பாரூக்கின் விடா முயற்சியினாலும், மாகாண சபை மூலம் இறைவன் தந்த அதிகாரத்தினை வைத்து மாகாண சபை மூலம் மாவட்ட பாடசாலைகளுக்கு கிடைக்கின்ற உதவிகளை முதலமைச்சர் ஹாபிஸ் நசீரின் நேரடி பார்வையின் கீழ் போராட்டமாக பெற்றுகொடுத்திருக்கின்ற நிலையில், இப்படியானவர்கள் போராட்டங்களுக்கு மத்தியில் பொறியியலாளரினால் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்களுக்கு உரிமை கூரி சமூக வலைத்தளங்களில் அறிக்கை விடுவதானது அரசியல் முதிர்ச்சி அற்ற சுயநல அரசியலினை மேற்கொள்ளும் அரசியல் நாகரீகமற்ற செயலாகவே நான் கருத்துகின்றேன்.

ஏற்கனவே மகாண சபை என்னும் அரசியல் பலத்துடன் மாற்று கட்சியிலிருந்து சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசினால் எடுக்கப்பட்ட சமூக ரீதியான சாதுரியமான முடிவினை பாராட்டி கட்சிக்குள் நுளைந்த பொறியியலாளர் ஷிப்லி பாரூக், கடந்த பாராளுமன்ற தேர்தலில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பலவருட அரசியல் வரலாற்றுக்கு பிற்பாடு காத்தான்குடியில் பத்தாயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுக்கொள்வதற்கு பெரும் பங்காற்றினார் என்பது ஒட்டு மொத்த காத்தான்குடி சமூகமும் அறிந்த விடயமாகவே பதியப்பட்டிருக்கின்றது. 

ஆகவே இந்த நிலையில் முஸ்லிம் காங்கிஸ் எனும் கட்சியினை பலம்பொருந்திய கட்சியாக காத்தன்குடியில் வளர்த்தெடுபதினை புறந்தள்ளி விட்டு அரசியல் நாகரீகமற்ற சுய நல அரசியலினை வேறு கட்களின் தூண்டுதல்களோடு செய்வதும், முஸ்லிம் காங்கிரஸினை காத்தான்குடியில் வளர்க்க துடிக்கும் பொறியலாளர் போன்ற இளைஞர்களை தான் வைத்திருக்கும் உயர்பீட உறுப்பினர் மற்றும் மத்திய குழு தலைவர் என்ற பதவிகளை வைத்து தடுக்க நினைப்பதும் அவர்களுடைய வங்குரோத்து அரசியலினையே எடுத்துக்காட்டுகின்றது....... 

இதைதான் யார் பிள்ளைக்கு எவர் பெயர் வைப்பது? என்ற கேள்வி என்னிடம் எழத்தொடங்கியுள்ளது?
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -