பல்கலைக் கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பது தொடர்பில் மருதமுனையில் விஷேட செயலமர்வு..!

பி.எம்.எம்.எ.காதர்-
ல்கலைக் கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக மருதமுனையில் விழிப்பூட்டும் விஷேட செயலமர்வு எதிர்வரும் 2016-05-07ஆம் திகதி சனிக்கிழமை 9.00 மணிக்கு மருதமுனை பொது நூலகத்தில் அமைந்துள்ள பிரஜைகள் வள நிலையத்தில் நடைபெறவுள்ளது. 

'கல்வி மற்றும் சமூக வலுவூட்டலுக்கான ஒத்துழைப்பு மையம்'(ளுநுளுநுகு)முற்றிலும் இலவசமாக நடாத்தவுள்ள இந்த விழிப்பூட்டும் விஷேட செயலமர்வில் 2015ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீpட்சையில் சித்தியடைந்து பல்கலைக் கழகத்திற்கு விண்ணப்பிப்பதற்குத் தகுதி பெற்ற தமிழ்,முஸ்லிம் மாணவர்கள் அனைவரும் கலந்து கொள்ள முடியும். 

கல்வி மற்றும் சமூக வலுவூட்டலுக்கான ஒத்துழைப்பு மையத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும்,சப்ரகமுவ பல்கலைக் கழகப் பதிவாளருமான எம்.எப்.ஹிபத்துல் கரீம் வளவாளராகக் கலந்து கொண்டு விரிவுரை நிகழ்த்தவுள்ளார்.

தற்போது நடைமுறையில் உள்ள இஸட் புள்ளி அடிப்படையில் விரும்புகின்ற பாடநெறிகளைத் தெரிவு செயவது எப்படி என்பது பற்றி விரிவாக விளக்கமளிக்கப்படவுள்ளது.

இந்த செயலமர்வில் கலந்து கொள்ள விரும்புகின்றவர்கள் 0711463706, 0771584168 ஆகிய இலக்கங்களுக்கு குறுஞ் செய்தி மூலம் மட்டும் தங்கள் பெயர்களைப் பதிவு செய்வதுடன் seaseforum@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் உங்கள் பெயர் விபரங்களை அனுப்பி வைக்க முடியும். 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -