திருகோணமலை சம்பூரில் காணாமல் போன இரு சிறுமிகள் மீட்பு...!

எப்.முபாரக்-
திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாட்டாளிபுரம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை (29) பகல் காணமல் போனதாகக் கூறப்படும் 8 மற்றும் 10 வயது சிறுமிகள் இருவரையும், சம்பூர் பொலிஸாரும் பொதுமக்களும் கண்டுபிடித்து வெள்ளிக்கிழமை (29) இரவு 11.00 மணியளவில் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த சிறுமிகள் இருவரும் வெள்ளிக்கிழமை (29) பாடசாலை முடிந்து வீட்டுக்கு செல்லாமல் இலங்கைத் துறை முகத்துவாரத்திலுள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் மாலையாகியும் பிள்ளைகள் இருவரும் வீடு திரும்பாததையடுத்து, பெற்றோர் சம்பூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து சம்பூர் பொலிஸாரும் பொதுமக்களும் தேடுதல் மேற்கொண்டு, சீனன்வெளி பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து சிறுமிகள் இருவரையும் பாதுகாப்பான முறையில் மீட்டெடுத்துள்ளனர்.

பாடசாலைக்கும் உறவினர்களின் வீட்டுக்கும் இடையிலான தூரம் 4 கிலோ மீற்றருக்கும் அதிகமாகும். இவர்கள் இருவரும் விளையாடி விளையாடிச் சென்றதனால் இரவாகியுள்ளது. சிறுமிகள் தனியாக செல்வதை அவதானித்த சீனன்வெளி பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர், இவ்விரு சிறுமிகளையும் பாதுகாப்பான முறையில் வீட்டுக்கு அழைத்துச் சென்று சம்பூர் பொலிஸாரிடம் தகவலை வழங்கி ஒப்படைத்ததாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு, குறித்த இரண்டு சிறுமிகளுக்கும் பொலிஸார் அறிவுரை வழங்கியதோடு இருவருக்கும் சிறுதொகை பணத்தையும் அன்பளிப்பாக வழங்கி அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -