‘பனாமா பேப்பர்ஸ்’ இலங்கையர்களின் பெயர் பட்டியல் வெளியாகின..!

லக வரலாற்றில் மாபெரும் இரகசிய ஆவணங்களின் கசிவான ‘பனாமா பேப்பர்ஸ்’ ஆவணக் கசிவு இலங்கை உட்பட உலகமெங்குமுள்ள பல செல்வந்தர்களையும் அதிகாரத்திலுள்ளவர்களையும் கதிகலங்க வைத்துள்ளது.

இந்நிலையில் பனாமா நாட்டில் சட்டவிரோதமாக பணம் பதுக்கி வைத்திருக்கும் இலங்கையர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.

சர்ச்சைக்குரிய அவண்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி, அமைச்சர் சம்பிக ரணவகவின் ஆலோசகர் வித்யா அமரபால, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலவின் அண்ணணும், அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் தலைவருமான ஜகத் சுமதிபால ஆகியோர் குறித்த விபரங்கள் இந்தப் பட்டியலில் உள்ளடங்கியுள்ளன.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான சேனக துணுவிலவும் இந்தப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளார்.

இம்முறை வெளியாகியுள்ள இரண்டாம் கட்டப் பட்டியலில் இலங்கையில் செயற்படும் வெளிநாட்டு நிறுவனங்களும் சட்டவிரோத பணப்பதுக்கலில் ஈடுபட்டுள்ள விபரம் தெரிய வந்துள்ளது.

குறித்த பணப்பதுக்கல் விவகாரத்தில் இலங்கையில் இருந்து மூன்று நிறுவனங்கள் மற்றும் நான்கு தனிநபர்கள் இடைத்தரகர்களாக செயற்பட்டுள்ளனர்.

இன்று வெளியாகியுள்ள பட்டியலில் முன்னைய பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்த 46 பேரும் உள்வாங்கப்பட்டிருப்பதுடன், மொத்தமாக 65 பேரின் பெயர்கள் இன்று வெளியாகியுள்ளன.

இதற்கு மேலதிகமாக இன்னும் சிலரின் விபரங்கள் இரண்டொரு நாட்களில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -