தோணாவின் நீர் மட்டம் திடீரென அதிகரித்தமையினால் மாளிகைக்காடு பாடசாலை வளாகத்தில் வெள்ளம்..!

அஸ்ஹர் இப்றாஹிம்-
காரைதீவு கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலய வளாகத்தில் இன்று தோணாவின் நீர் மட்டம் இரவோடு இரவாக திடீரென அதிகரித்தமையினால் பாடசாலைக்கு காலை வேளையில் மாணவர்கள் நுழைவதில் சில கஸ்டமான நிலை நிலவிய போதிலும் அதிபர் மேற்கொண்ட முயற்சியின் பயனாக மாணவர்களும் ஆசிரியர்களும் மற்றைய நுழைவாயிலினூடாக பாடசாலைக்கு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

காரைதீவில் இருந்து ஆரம்பித்து மாளிகைக்காடு ஊடாக சாய்ந்தமருதில் முடிவடையும் தோணாவின் நீர் மட்டம் இரவோடு இரவாக திடீரென அதிகரித்தமையினாலேயே மேலதிக நீர் பாடசாலை வளாகத்தினுள் புகுந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மூன்று தினங்களுக்கு மேலாக இப்பிரதேசத்தில் விடாத மழை பெய்தபோதிலும் கூட இவ் வெள்ளப் பெருக்கு ஏற்படவில்லை என அதிபர் ஏ.எல்.எம்.ஏ.நழீர் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -