பொறியியலாளர் சிப்லி பாறுக் அவர்களின் இன ஒற்றுமைக்கான வீதிக்கொரு நாள் வேலைத்திட்டம்..!

M.T. ஹைதர் அலி-
ட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை - கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் மாங்கேணி தெற்கு 211G, புனானை 211B ஆகிய இரு கிராம சேவையாளர் பிரிவிலுமுள்ள காரமுனை மற்றும் ஆலங்குளம் கிராமங்களில் மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் அவர்களின் வீதிக்கொரு நாள் மக்கள் குறை கேட்கும் நிகழ்ச்சித்திட்டம் 2016.05.05ஆந்திகதி வியாழக்கிழமை ஆலங்குளம் அ.த.க. பாடசாலையில் நடைபெற்றது.

மட்டு மாவட்டத்தில் இன மத பேதமின்றி தனது சேவையை வழங்கி வரும் மாகாண சபை உறுப்பினர் அவர்களின் வீதிக்கொரு நாள் எனும் மக்கள் குறை கேட்கும் நிகழ்ச்சித்திட்டத்தினூடாக மக்கள் குறைகளை அவர்களின் இல்லம் நாடிச்சென்று கேட்டறிந்து பல அபிவிருத்தி பணிகளை அரச நிதி மூலமும் தனது சொந்த நிதி மூலமும் வழங்கி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அந்த வகையில் பொறியியலாளர் சிப்லி பாறுக் அவர்களின் வீதிக்கொரு நாள் நிகழ்ச்சித் திட்டமானது மட்டு மாவட்டத்தில் தமிழ் முஸ்லிம் பிரதேசங்களை உள்ளடக்கியதாக அமைவதால் நம் நாட்டின் இன ஒற்றுமைக்கான ஒரு செயற்பாடாகவும் இதனை நாம் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

அத்தோடு காரமுனை, ஆழங்குளம் கிராமங்கள் தமிழ், முஸ்லிம் மக்கள் குடியிருக்கும் ஓர் கிராமமாகும். இம்மக்களுக்கும் தனது சேவை சென்றடைய வேண்டும் என்ற நோக்குடன் பொறியியலாளர் சிப்லி பாறுக் வீதிக்கொரு நாள் நிகழ்ச்சித்திட்டத்தை இப்பிரதேசத்திற்கு பொதுவான ஓர் இடத்தில் நடாத்தினார்.

இதில் இரு கிராமங்களிலும் காணப்படும் மக்களின் பொதுப்பிரச்சினைகளுக்கும் அவர்களது தனிப்பட்ட விடயங்களுக்கும் மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் அவர்களினால் தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

பொதுமக்களின் பிரச்சினைகளாக இரு கிராமத்திற்கும் செல்லும் வீதி குண்றும் குழியுமாக காணப்படுவதால் அதனை சமப்படுத்தி தருமாறும், மின்சார வசதிகள் இல்லாத வீடுகளுக்கு மின்சார இணைப்பை ஏற்படுத்தி தருமாறும், இக்கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு மலசலகூட வசதிகள் இல்லாத வீடுகளுக்கு அதனை பெற்றுத்தருமாறும், வீடு இல்லாத மக்களுக்கு வீட்டுத்திட்டம் மற்றும் பேருந்து தரிப்பிடம் ஆகியவற்றை பெற்றுத்தருமாறு பொதுமக்களினாலும் பொது அமைப்புக்களினாலும் மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் அவர்களிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

இவை அனைத்தையும் கருத்திற்கொண்ட பொறியியலாளர் சிப்லி பாறுக் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை தொலைபேசியினூடாக தொடர்பு கொண்டு இம்மக்களின் துயரங்களை தெரியப்படுத்தியதோடு, குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் இவை அனைத்திற்கும் தீர்வினை பெற்றுத்தருவதாகவும் பொதுமக்களுக்கான வாழ்வாதார உதவிகளாக ஆடு, மாடு வளர்ப்புக்காக மாணிய அடிப்படையிலான உதவிகள் மற்றும் தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டு இக்கிராம மக்களுக்கு என்ன சேவையாற்ற முடியுமோ அனைத்தையும் பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்தார்.

அத்தோடு, உடனடித்தீர்வாக இரு வார நாட்களுக்குள் குண்றும் குழியுமாக காணப்படும் ஆலங்குளம் வீதியினை சமப்படுத்துவதற்குரிய ஏற்பாடுகளை பெற்றுக்கொடுத்தார்.

இறுதியாக இந்நிகழ்வில் உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக்...

நான் இக்கிராமத்திற்கு வந்த நோக்கமானது இப்படியான பின்தங்கிய கிராமங்களுக்கு சென்று அவர்களின் குறைநிறைகளை கேட்டறிந்து சேவையாற்றுவதோடு, உங்களிடம் வரக்கூடிய அரச அதிகாரிகள் என்றால் அது கிராம சேவை உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் இவர்கள் மாத்திரமே. இவர்களால் உங்களுக்கு என்னென்ன சேவைகளை ஆற்ற முடியுமோ அவற்றை உங்களுக்கு வழங்குகின்றார்கள். 

இங்கு நான் வந்தபோது மகளிர் அபிவிருத்தி சங்க தலைவியினால் இக்கிராமத்தில் 35 பேருக்கு மலசலகூட வசதி இல்லையென்று தெரிவித்தார். நான் தெலைபேசியினூடாக மாவட்ட உதவி திட்டமிடல் பணிப்பாளரை தொடர்புகொண்டு விடயத்தினை தெரியப்படுத்தியபோது மலசலகூட வசதி இல்லாத நபர்களை கிராம சேவை உத்தியோகத்தர் ஊடாக பிரதேச செயலாளர் முலம் உறுதிப்படுத்தி அனுப்பி வைக்குமாறு என்னிடம் குறிப்பிட்டார். 

இதனை குறிப்பிட்டவர் அரச அதிகாரி நான் இவ்விடயத்தினை எவ்வாறு மேலதிகாரிகளை தொடர்புகொண்டு பெற்றுத்தர இயலுமோ அவ்வாறு அவற்றுக்கான முயற்சிகளை மேற்கொள்வேன். அத்தோடு மாணிய அடிப்படையில் வழங்கக்கூடிய உதவிகள் இருக்கின்றன அவற்றையும் தங்களுக்கு பெற்றுத்தருவேன் என தெரிவித்தார்.

மனித நேயம் என்பது இப்போது யாரிடமும் இல்லை. தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற வேறுபாடு இருக்கக்கூடாது உங்களுக்கு ஏதும் உதவி செய்ய வேண்டுமா நாங்கள் செய்வோம் எங்களுக்கு ஏதும் உதவி வேண்டுமா அதனை நீங்கள் செய்ய வேண்டும் இதுதான் இன ஒற்றுமை.

எமக்கு அதிகாரம் இருக்கும் காலங்களில் மக்களுக்கு எவ்வகையான சேவையாற்ற முடியுமோ அவற்றை பெற்றுக்கொடுக்க வேண்டும். நான் இக்கிராமத்தில் செய்தது நடமாடும் சேவை அல்ல இதன் பெயர் வீதிக்கொரு நாள் 12 ஆவது இடமாக இதனை மேற்கொண்டு வருகின்றேன். காத்தான்குடி, ஏறாவூர், மாவிலங்கு துறை மற்றும் பாலமுனை என பல கிராமங்களில் எனது இச்சேவையினை மேற்கொண்டுள்ளேன். என தனதுரையில் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இரு பிரிவுகளுக்குமான கிராம சேவை உத்தியோத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி சங்கம், மகளிர் அபிவிருத்தி சங்கம், விவாசாய அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -