கிங் கங்கை பெருக்கெடுத்ததால் காலியில் பல பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன...!

கிங் கங்கை பெருக்கெடுத்ததால் காலி மாவட்டத்தின் தாழ்வான பல பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக உடுகம – பத்தேகம மற்றும் உடுகம - நெலுவ பாதைகளின் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை, தவலம பிரதேசத்தில் உள்ள பல வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தெற்கு அதிவேக பாதையில் வெலிப்பனை நுழையும் பாதையின் அருகில் உள்ள பிரதேசமும் நீரில் மூழ்கியுள்ளது.

தொடர்ந்து மழை பெய்தால் வெலிப்பனை நுழையும் பாதையை மூடவேண்டிய நிலை ஏற்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதனோடு அதிவேக பாதையில் வாகனங்களை ஓட்டும் சாரதிகள் வாகனத்தை கட்டுப்படுத்தக்கூடிய வேகத்தில் செலுத்துமாறு அந்த சபை கோரியுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -