புரியாமல் பதில் தந்த மாகாணசபை உறுப்பினருக்கு விபரமான பதில் -அபு பலாஹ்

அபூ பலாஹ்-

சிய அபிவிருத்தி வங்கியின் நிதியில் கிழக்கு மாகாணத்துக்கு கிடைத்திருக்கும் 600 கிலோமீற்றர் காபட் வீதிகளில் உள்ளூர் வீதிகளுக்காக ஒதுக்கப்பட்ட 400 கிலோமீட்டரில் அக்கரைப்பற்றுக்கு முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவினால் 16.5 கிலோ மீட்டர் வீதி கிடைத்தமைக்காக. நன்றி கூறியதில் என்ன தவறு இருக்கிறது என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினரை கேட்க விரும்புகிறேன்.

அதாவது அம்பாறை மாவட்டத்தில் இருக்கும் சகல பிரதேசங்களுக்கும் கூடியதாக 07 தொடக்கம் 09 கிலோமீட்டர் வீதிகள் கிடைத்திருக்கும்போது
 ஏன் பல ஊர்களை உள்ளடக்கிய கல்முனை மாநகருக்கே 8.5 கிலோமீட்டர் வீதி கொடுத்திருக்கும்போது அக்கரைப்பற்றுக்கு 16.5 கிலோ மீட்டர் கிடைத்திருப்பது உங்களின் திறமையா?
அல்லது உங்கள் கட்சியின் திறமையா?
உங்களால்தான் ஒரு செங்கல் நட்ட முடியுமா? 
அல்லது ஒரு செங்கல்லையேனும் உங்களால் அசைக்க முடியுமா? அதாவுல்லாவின் சேவையில் பெயர்வைக்க விரும்பும் நீங்கள் ஏதாவது செய்ய முயற்சி செய்தீர்களா?

சவால் விட நாங்கள் பதவிக்காக அலைபவர்கள் அல்ல நடப்பவற்றையே தெளிவாகவும் உண்மையாகவும் கூறியிருக்கிறோம். ஆகவே அக்கரைப்பற்றில் அதாவுல்லாஹ் செய்த வேலையில் பெயர் எழுதிப்பார்த்து மகிழமட்டுமே உங்களால் முடியுமே தவிர வேறொன்றும் செய்ய முடியாது ஆனால் நீங்களும் முன்வர வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறோம்.

இப்போது விடையத்துக்கு வருகிறேன்

அதாஉல்லாஹுக்கு நன்றி சொன்னதன் நோக்கம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்டத்தில் வந்திருக்கும் பாதையைக் கொண்டு வந்தவர் அதாஉல்லா என்றல்ல அந்த 16.5 கிலோமீட்டர் அக்கரிப்பற்றுக்கு வருவதற்க்கு இடமளித்து இருப்பவர் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா என்றே கூறவந்தேன்.

 சரியாகப் புரியாமல் நீங்கள் மல்லுக்கட்டினால் நான் ஒன்றும் சொல்லுக் கட்ட முடியாது.
அதாவுல்லாவின் தூர நோக்கில் உருவான மாநகர சபை, பிரதேச சபை இதன் காரணம்தான் இன்று அக்கரைப்பற்றுக்கு அதிகளவிலான சேவைகள் வருகிறது. அதிலும் அக்கரைப்பற்றுக்கு வந்திருக்கும் காபட் வீதி உங்கள் முயற்சியால் வந்தது என்று மட்டும் இடிமுழக்கமான உங்கள் வழக்கமான பொய்யைச் சொல்லிவிடவேண்டாம். இந்த வீதிகள் அலிக்கம்பை, பனங்காடு போன்ற ஊர்களுக்கும் வந்திருக்கு அங்கு எந்த உறுப்பினரும் இல்லை என்பதனையும் புரிந்திருப்பீர்கள்.

இன்று அக்கரைப்பற்று உலகப் புகழில் பூத்துக்குலுங்குகிறது அதில் உங்களைப் போன்றவர்கள் அரசியல் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதனை மறவாமல் நன்றியுடன் இருக்குமாறு தெரிவிப்பதுடன் எதிர்வரும் காலம் நீங்கள் பெயர்வைக்க வந்து மூக்குடைந்த எங்கள் பிள்ளையான நீர் தடாகத்துக்கு அதாவே பெயர்வைக்க வருவார் என்னும் உங்களால் சகிக்க முடியாத உண்மையைச் சொல்லி முடிக்கிறேன்.

தொடர்பான அறிக்கை....கிளிக் செய்யவும்...
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -