மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்கவும் - ஜனாதிபதி உத்தரவு

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் ஒன்று, ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அபேகோன் தலைமையில் இன்று (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குமாறு சம்பந்தப்பட்ட உத்யோகத்தர்களுக்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி, மக்களுக்கு தேவையான உணவு மற்றும் ஏனைய வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்காக தேவையான நிதியினை ஒதுக்கீடு செய்யுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆலோசனை வழங்கினார்.

அத்துடன் ஏற்படக்கூடிய அனர்த்த நிலைமைகள் பற்றி தொடர்ந்தும் அவதானிப்புடன் இருக்க வேண்டுமென அனர்த்த முகாமைத்துவ அமைச்சர், பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட முப்படை தளபதிகளுக்கும் பொலிஸ்மா அதிபருக்கும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் பற்றி பொது மக்களுக்கு அறியத்தருவதற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் முறையான வேலைத்திட்டங்களை துரிதமாக செயற்படுத்துமாறும், முகங்கொடுக்க நேர்கின்ற அசௌகரியங்கள் தொடர்பில் மக்களை அறிவூட்டக்கூடிய வகையில் அதிகாரிகளுக்கு தகவல்களை வழங்கக்கூடிய வசதிகளை ஏற்படுத்துமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். (ஸ)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -