யாழ் நூல் நிலையம் எரிக்கப்பட்ட தினம் இன்று (31st of May,1981). எரிக்கப்பட்டு 35 வருடங்களாகிறது.
97 ஆயிரம் நூல்களைக் கொண்ட புகழ்பெற்ற யாழ்ப்பாண நூலகம் மே 31-ஆம் திகதி இரவு 10 மணிக்கு நுழைந்த கொடியவர்கள் அங்கிருந்த காவலர்களைத் துரத்தி, நூலகத்தின் கதவை உடைத்து, நூல்களின் வரிசைக்கு பெட்ரோல் ஊற்றி கொளுத்தினர் இதனால் 1981 ஜூன் 1-ஆம் திகதி நூலகம் முற்றாக தீக்கிரையாக்கப்பட்டது.
செய்தி கேட்டு உலகமே அதிர்ச்சியுற்றது. யாழ்ப்பாணத் தமிழர்கள் வீதிக்கு வந்து கதறி அழுதனர். வரலாற்றில் மன்னிக்க முடியாத கருப்பு நாள் இது!
இன்று இதன் தோற்றம்....