மைத்திரிபால இங்கிலாந்து நோக்கி , மஹிந்த உகண்டா நோக்கி

னாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (11) இங்கிலாந்து நோக்கி பயணமாகவுள்ளார்.  லண்டனில் நடைபெறும் ஊழல்களுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காகவே ஜனாதிபதி இங்கிலாந்து செல்வதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. 

பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனின் விஷேட அழைப்பின் பேரிலேயே ஜனாதிபதி அங்கு விஜயம் செய்கின்றார்.  இந்த மாநாட்டின் பின்னர் ஜனாதிபதிக்கும் பிரித்தானிய பிரதமருக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை ஒன்றும் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. 

ஜனாதிபதியின் இங்கிலாந்து விஜயத்திற்கு பின்னர் இந்தியாவிற்கான விஜயம் ஒன்றையும் மேற்கொள்ளவுள்ளார்.  இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உகண்டாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். 

இன்று அதிகாலை அவர் உகண்டா நோக்கி விஜயம் செய்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் கூறினார்.  யொவேரி முசவேனி 06 வது தடவையாக மீண்டும் அந்தநாட்டு ஜனாதிபதியாக பதவியேற்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவே மஹிந்த ராஜபக்ஷ அங்கு செல்கின்றார். 

மஹிந்த ராஜபக்ஷவிற்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றே அவர் அங்கு செல்கின்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -