ஜுனைட்.எம்.பஹ்த்-
எதிர்வரும் புனித ரமழான் மாதத்தை பிரயோசனமுள்ளதாக அமைத்துக் கொள்ளவும், ரமழான் பற்றிய தவறான புரிதல்களை தெளிவு படுத்தும் நோக்கிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த தெளிவுரை மகாநாடு
"பொக்கிஷங்களை சுமந்து வரும் புனிதமிகு ரமழானை எவ்வாறு வரவேற்பது?"
என்ற தலைப்பில் இன்ஷா அல்லாஹ் 01.06.2016 புதன்கிழமை (நாளை) இஷா தொழுகையை தொடர்ந்து காத்தான்குடி முஹைதீன் மெத்தை பெரிய ஜும்மா பள்ளிவாயலில் நடைபெற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம் மாநாட்டில் விஷேட சொற்பொழிவாளராக அகில இலங்கை ஜம்யிய்யதுல் உலமாவின் பத்வா குழு உறுப்பினர்களிள் ஒருவரும் , ஹயாதுஸ் ஸஹாபா மொழி பெயர்ப்பாளருமான நாடறிந்த பேச்சாளர் அஷ்ஷேய்க் MHM.யஹ்யா (பலாஹி, பின்னூரி) அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார்கள்.
எனவே ஊரில் உள்ள உலமாக்கள், கல்விமான்கள், வாலிபர்கள் , பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு தெளிவு பெற்று வருகின்ற ரமழானை பிரயோசனமுள்ள ரமழானாக அமைத்துக்கொள்ள முயற்சிக்குமாறு அன்பாய் அழைக்கின்றோம்.
SL Youth Media Network