பாராளுமன்றத்திற்குள் மஹிந்த ஆதரவான் ஒன்றிணைந்த எதிரணியினரால் என் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் நேற்றுமுன்தினம் மற்றுமொரு தாக்குதல் இடம்பெற்றிருக்காது என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற அவசர் ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது முஜிபுர் ரஹ்மான் எம்.பி. மேலும் தெரிவிக்கையில்,
கடந்த வருடம் ஆகஸ்ட் 17 ஆம் திகதி நாம் அரசாங்கத்தை கைப்பற்றிய பின்னர் மஹிந்த அணியில் இருக்கும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றம் ஆரம்பித்ததனையடுத்து இடையூறுகளையும் குழப்பத்தையும் விளைவிப்பதையுமே இலக்காக கொண்டு செயற்படுகின்றனர்.
பாராளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு விடாது அவை நடுவில் ஆர்ப்பாட்டங்கள் செய்துவருகின்றனர். நா.ௌான்றுக்கு கோடிக்கணக்கான மக்கள் பணம் விரையமாவதற்கு மஹிந்த தரப்பினர் காரணமாக இருக்கின்றனர். மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்குமான நேரமும் நாட்டின் சட்ட ஒழுங்குகளை பாதுகாப்பதற்கான நேரமும் இவர்களால் திட்டமிடப்பட்டு வீனடிக்கப்படுகின்றது.
பாராளுமன்ற சபாநாயகருக்கு அவை நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்லவிடாது தொடர்ச்சியாக இடையூறு விளைவிக்கும் கூட்டு எதிரணியினர் அவருக்கு அச்சுறுத்தலும் விடுத்திருக்கின்றனர்.
அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறே பாராளுமன்றம் நடத்தப்படவேண்டும் என எதிர்ப்பார்க்கின்றனர். இல்லையேல் வினான பிரச்சினைகளை கொண்டுவந்து அவையை குழப்புகின்றனர்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட வசீம் தாஜுதீனின் விவகாரம் குறித்து கதைக்க முற்பட்டபோது மஹிந்த அணியினர் என்னை சுற்றுவலைத்து தாக்க முற்பட்டனர். என்னை தாக்குவதாக கூறினர். எனக்கு கொலை அச்சுறுத்தலும் விடுத்தனர். தாஜுதீனின் விவகாரத்தை கதைக்க வேண்டாம் என கூறினர்.
ஜனவரி 8 இல் நாம் இல்லாதொழித்த இராஜக அரசியலை மீண்டும் முன்னெடுத்துச் செல்வதற்கான எத்தனிப்புகளையே ஒன்றிணைந்த எதிரணியின் மேற்கொள்கின்றனர்.
இவர்கள் பாராளுமன்றுக்கு வந்து அவைக்கு அச்சுறுத்தல் விடுத்து நாட்டின் ஜனநாயக முறையை கேள்விக்குறியாக்கும் வேலைத்திட்டங்களையே முன்னெடுக்கின்றனர்.
இது சாதாரண பிரச்சினையாக கொள்ள முடியாது. கடந்த ஆட்சியின்போது மஹிந்த ராஜபக்ஷவும் அவரது சகபாடிகள் சிலர் நாட்டை ஆட்சி செய்த முறையை நாம் பார்தோம். அவர்கள் மக்களுக்கு பொருளாதார சுமையை ஏற்படுத்தினர், வெள்ளை வேன் கலாச்சாரத்தை நடைமுறைப்படுத்தினர், ஊடகவியலாளர்களை அச்சுறுத்தினர், இன, மத வன்முறையாளர்களை போசித்து அப்பாவி பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்தனர். இந்த தைரியத்துடன் இன்று பாராளுமன்றத்தில் வந்து எம்மை பயமுறுத்த முற்படுகின்றனர். எங்கள் வையை அடைத்து வீழ்த்துவதற்கு எத்தனிக்கின்றனர். பாராளுமன்ற சம்பிரதாயங்களை மீறி சபாநாயகரை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முற்படுகின்றனர். இவற்றுக்கு இடமளிக்க முடியாது. இதனை தடுத்து நிறுத்த தோற்கடிக்க வேண்டும்.
மஹந்த ராஜபக்ஷவின் எடுபிடிகள் பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கின்றனர். இந்த கெடுபிடிகளினால் சட்டத்தை உருவாக்கி நடை முறைப்படுத்தும் உயர்ந்த சபையில் பணிகள் ஸ்தம்பிதம் அடைகின்றது.
நாம் நல்லாட்சி அரசாங்கத்தை முன்னெடுத்து செல்வதற்காக சபாநாயகரிடம் சில வேண்டுகோள்களை முன்வைக்கிறோம். பாராளுமன்ற உறுப்பினர்கள் அவை ஒழுங்குகளை பின்பற்றாவிடினும், சபாநாயகருக்கான கௌரவத்தை அளிக்காது அவமதிப்பார்களேயானால் உங்களுக்குறிய அதிகாரங்களை பயன்படுத்தி நடவடிக்கை எடுங்கள்.
எனக்கு அச்சுறுத்தி தற்போது 6 மாதங்களாகின்றன. இன்னும் இவ்விவகாரம் விசாரணை மட்டத்திலேயே இருக்கின்றது. அன்று இடம்பெற்ற அசம்பாவிதங்களை தடுக்காததனாலேயே தற்போது சந்தீஸ் எம்.பி. மீது வன்முறைகளுக்கு இரையாகியுள்ளார்.
மோசமாக நடந்துகொண்டவர்கள் மீது சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுத்திருப்பின் இவ்வாறான தாக்குதல்களை தடுத்திருக்க முடியும். இவற்றை கட்டுப்படுத்தாவிடின் மஹந்த அணியினரின் வன்மத்திற்கு நாம் தொடர்ந்தும் இறையாவோம். எனவே, சபாநாயகர் தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி இந்த கலவரக்காரர்களுக்கு உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.