க.கிஷாந்தன்-
பெருந்தோட்ட தொழிலாளர்களது சம்பளத்தை அதிகரித்து தருமாறு கோரி அட்டனில் கையெழுத்து பெறும் நடவடிக்கை ஒன்று இடம்பெறவுள்ளது.
இந்த கையெழுத்து பெறும் நடவடிக்கை எதிர்வரும் 15ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
பெருந்தோட்ட தொழிலாளர்களது சம்பளத்தை 1000 ரூபாவாக உயர்த்துவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையிட்டு விரைவில் தீர்மானமொன்றை பெற்றுத் தருமாறு கோரியே இந்த கையெழுத்து பெறும் நடவடிக்கை இடம்பெறவுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட இணைப்புச் செயலாளர் பெரியசாமி பிரதீபன் தலைமையில் எதிர்வரும் 15ம் திகதி காலை 10.00 மணிக்கு அட்டன் பஸ் நிலையத்தில் இந்த கையெழுத்து பெறும் நடவடிக்கை இடம்பெறவுள்ளது.
இதேவேளை, தொழிலாளர்களின் சம்பள உயர்வு உள்ளிட்ட கூட்டு உடன்படிக்கை நிறைவடைந்து இரண்டு ஆண்டுகள் கடந்த போதிலும் இதுவரையில் தொழிலாளர்களுக்கு எவ்வித சம்பள அதிகரிப்பும் வழங்கப்படவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட இணைப்புச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே பெருந்தோட்ட தொழிலாளர்களது சம்பளத்தை அதிகரிக்கும் நோக்குடன் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட தொழிலார்களிடம் இருந்து கையொப்பங்களை சேகரிக்குமுகமாக இந்த கையெழுத்து பெறும் நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.