கிழக்கு மாகாண அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் உள்ளிட்ட அரச உயர்மட்ட குழுவினர் இன்று ஜப்பான் நாட்டுக்கு உத்தியோகபூர்வ பயணம்...
ஜப்பான் நாட்டு அரசாங்கத்தின் அழைப்பையேற்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எ.எல்.எம்.நசீர் உட்பட அரச உயர்மட்ட தூதுக் குழுவினர் ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று மாலை ஜப்பான் நாட்டுக்கு பயணமாகின்றனர்.
இலங்கை அரச உயர்மட்ட துதுக் குழுவில் மத்திய அமைச்சர்கள், மாகாண அமைச்சர்கள் உள்ளிட்ட பல அரச உயரதிகாரிகளும் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்விஜயத்தின் போது ஜப்பான் நாட்டு பிரதமருடன் முக்கிய கலந்துரையாடலும் இடம்பெற உள்ளதுடன் மேலும் பல கருத்தரங்குகளிலும் அரச உயர்மட்ட தூதுக்குழு பங்குபெறவுள்ளது.