முஸ்லிம் லீக் ஸ்தாபகர் தின நிகழ்வு - சம்பந்தனுடன் சம்பிக்க பங்கேற்பு

கில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளன (ACUMLYF) ஸ்தாபகர் தின நிகழ்வு எதிர்வரும் 18 ஆம் திகதி, புதன்கிழமை மாலை 4.45 மணிக்கு கொழும்பு 10, டி.ஆர் விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் சம்மேளனத்தின் தேசிய தலைவர் ஜனாப் பி.எம்.பாறூக் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் தமிழ் மற்றும் சிங்கள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இரு பெரும் அரசியல் தலைவர்களான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான கௌரவ ஆர்.சம்பந்தன் அவர்கள் பிரதம அதிதியாகவும், மாநகரங்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டளி சம்பிக ரணவக அவர்கள் பிரதம பேச்சாளராகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

சமூக மேம்பாடு, இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம், சகவாழ்வை ஏற்படுத்தும் நோக்குடன் ஏனைய சமூகங்களுடன் ஒன்றிணைந்து செயற்படும் நோக்கில் உருவாக்கப்பட்ட அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் ஸ்தாபகத் தலைவரும் முன்னாள் சபாநாகருமான மர்ஹூம் தேசமான்ய எம்.ஏ. பாக்கிர் மாக்கார் மற்றும் ஏனைய ஸ்தாபக உறுப்பினர்களும் நினைவூகூறப்பட்டு, அவர்களது குடும்ப உறுப்பினர்களும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.

முஸ்லிம் லீக்கின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், மாவட்ட சம்மேளனங்களின் உறுப்பினர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சிப் பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வளர்கள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொள்ளும் இந்நிகழ்வில், களுத்துறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணியினால் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கும் புலமைப்பரிசில்களும் வழங்கிவைக்கப்படவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -