அக்கரைப்பற்று மாநகர சபையின் புதிய கணக்காளராக பாறுக் பர்ஹான் கடமையேற்பு!

அய்ஷத்

அக்கரைப்பற்று மாநகர சபையின் புதிய கணக்காளராக பாலமுனையைச் சேர்ந்த முஹம்மது பாறுக் பர்ஹான் நேற்று (மே 30) கடமையேற்றார்.

பாலமுனை 3 ம் பிரிவைச் சேர்ந்த முஹம்மதுலெவ்வை முஹம்மது பாறூக் (கவிஞர் பாலமுனை பாறூக்)அலி உதுமாலெவ்வை நூறுல் லரீபா தம்பதிகளின் புதல்வரான மு.பா.பர்ஹான் தன்மு தல் நிலைக் கல்வியை (தரம் 01-03 வரை) பாலமுனை அல்ஹிதாயா வித்தியாலயத்திலும், தரம் 04 தொடக்கம் க.பொ.த உயர்தரம் வரை அக்கரைப்பற்று அஸ்ஸிராஜ் மகா வித்தியாலயத்திலும் கற்றார்.

  • 2008 இல் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் BBA பட்டப்படிப்பினை வெளிவாரியாக நிறைவு செய்தார்.
  • 2013 இல் இந்திய அழகப்பா பல்கலைக்கழகத்தில் வணிக முதுமானி (M.Com-Finance) கற்றுத் தேர்ந்தார்.
  • 2011 இல் இலங்கை பட்டய கணக்காளர் நிறுவனத்தின் CAB-1 பரீட்சையில் சித்தியடைந்தார்.
  • 2004 இல் இலங்கை கணக்கீட்டு தொழில்நுட்பவியலாளர் கழக அங்கத்துவம் (MAAT SL) பெற்றார்.
  • தற்சமயம் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டமானி (LLB) கற்கையினையும் இரண்டாம் ஆண்டில் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
  • 2003 இல் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் Certificate in English கற்றார்.
  • 2016 இல் இலங்கை கணக்காளர் சேவை பரீட்சையில் (SLAcS) சித்தியடைந்தார்.
  • தற்சமயம் SLIDA இல் Diploma in Public Accounting கற்கையினையும் தொடர்ந்துகொண்டிருக்கிறார்.
  • 2008-2016 வரை கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தராக சேவையாற்றி தரம் 2 இற்கும் பதவி உயர்வு பெற்றார்.
  • அத்தோடு SIYB நிறுவன சந்தைப்படுத்தல் மற்றும் கணக்கு வைப்பு வளவாளராகவும் பணிபுரிகிறார்.
  • பாலமுனையிலிருந்து முதன்முதலாக இலங்கை கணக்காளர் சேவை பரீட்சையில் (SLAcS) சித்தி பெற்று முதல் கணக்காளரானவர்,பாலமுனையின் முதல் வணிக முதுமானி (M.Com). பாலமுனையின் முதல் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்,பாலமுனையிலிருந்து முதன் முதலாக இலங்கை கணக்கீட்டு தொழில்நுட்பவியலாளர் கழக அங்கத்துவம் பெற்றவர் (MAAT SL)போன்ற கெளரவத்துக்குரியவர்.
  • 2013 முதல் அகில இலங்கை சமாதான நீதவானாகவும் ,
  • பாலமுனை ட்ரை ஸ்டார் விளையாட்டுக் கழகம், இக்ரஃ சனசமூக நிலையம் ஆகியவற்றின் செயலாளராகவும், SRC அமைப்பின் பொருளாளராகவும் இருப்பதோடு பாலமுனையின் அபிவிருத்திப்பணிகளில் பெரும் பங்களிப்பினையும் வழங்கி வருகின்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -