டக்ளஸ் தேவா­னந்தா போலி வார்த்­தை­க­ளை கொக்­க­ரிப்பது வேடிக்­கை - கவீந்­திரன் கோடீஸ்­வரன்

கஜரூபன்-
யுத்­தத்தில் சிக்­குண்டு தமிழ் மக்கள் வேனையில் தவித்­த­போது மஹிந்த அர­சாங்­கத்­துடன் இருந்த டக்ளஸ் தேவா­னந்தா தமிழ் மக்கள் பற்றி எந்த அக்­க­றையும் கொள்­ளாது தனது சுக­போக அர­சி­யலில் வாழ்ந்­து­விட்டு இன்று தன்னால் எதுவும் முடி­யாத நிலையில் போலி வார்த்­தை­க­ளையும் கொக்­க­ரிப்­புக்­க­ளையும் செய்து வரு­வது வேடிக்­கை­யான விட­ய­மா­கவே பார்க்­க­வேண்டி இருக்­கின்­றது. 

ஆனால் எமது தமிழ்த் தேசி யக் கூட்­ட­மைப்­பா­னது இவர்­க­ளது எந்­த­வி­த­மான கொக்­க­ரிப்­பிற்கும் அடி­ப­ணி­யாது என அம்­பாறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் த.தே.கூட்­ட­மைப்பின் அம்­பாறை மாவட்ட அபி­வி­ருத்­திக்­கு­ழுவின் தலை­வ­ரு­மான கவீந்­திரன் கோடீஸ்­வரன் தெரி­வித்தார். 

திருக்­கோயில் விபு­லா­னந்தா அக­டமி கல்வி நிலை­யத்தின் ஏற்­பாட்டில் அதன் தலைவர் எஸ்.ஜெய­பாலன் தலை­மையில் இம்­முறை பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கும், கல்­வி யி­யற்­கல்­லூ­ரி­க­ளுக்கும் தெரி­வான மாண­வர்­க­ளையும், கல்விப்­பொது சாதா­ரண தரப்­ப­ரீட்­சையில் அதி­யுயர் சித்­தி­களை பெற்ற மாணவர்­க­ளையும் பாராட்டி கௌர­வித்து விருது வழங்கும் விழா­வா­னது சனிக்­கி­ழமை திருக் ­கோயில் கலா­சார மத்­திய நிலை­யத்தில் நடை­பெற்­றது. 

இந்­நி­கழ்­விற்கு பிர­தம அதி­தி­யாக அம்­பாறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் த.தே.கூட்­ட­மைப்பின் அம்­பாறை மாவட்ட அபி­வி­ருத்­திக்­கு­ழுவின் தலை­வ­ரு­மான கவீந்­திரன் கோடீஸ்­வரன், மற்றும் கௌரவ அதி­தி­க­ளாக திருக்­கோயில் வல­யக்­கல்வி பணிப்­பாளர் ஆர்.சுகிர்­த­ராஜன், திருக்­ கோயில் பிர­தேச செய­லாளர் எஸ்.ஜெக­ராஜன், தென்­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்தின் வணிக முகா­மைத்­துவ பீட பீடா­தி­பதி எஸ்.குண­பாலன், மற்றும் விசேட அதி­திகள் கிரா­மத்து பெரி­யார்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்­டனர். 

இங்கு அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில், இந்த நாட்­டிலே நல்­லாட்சி நடை­பெற்று வரு­கின்­றது என்று கூறு­கின்றோம் ஆனால் பாரா­ளு­மன்­றத்தில் நடை­பெற்ற குறை நிரப்பு பிரே­ர­ணையின் போது த.தே.கூட்­ட­மைப்பு அர­சுடன் சேர்ந்து வாக்­க­ளிக்­காமல் விட்­டி­ருக்­கு­மானால் இன்­றுள்ள நல்­லாட்சி கெட்­டாட்­சி­யாக மாறி­யி­ருக்கும். 

அவ்­வாறு இல்­லாமல் தமிழ் மக்­களின் நலன்­க­ருதி நல்­லாட்­சிக்கு முட்­டுக்­கொ­டுக்கும் ஒரு கட்­சி­யா­கவே த.தே.கூட்­ட­மைப்பு இருந்து வரு­கின்­றது. கடந்த ஆட்­சிக்­கா­லத்­தின்­போது ஈ.பி.டி.பி கட்­சியின் செய­லாளர் நாய­க­மாக விளங்கும் டக்ளஸ் தேவா­னந்தா எவ்­வாறு செயற்­பட்டு தனது அர­சி­யலை கொண்டு சென்றார் என்­பது உங்கள் அனை­வ­ருக்கும் தெரிந்த விடயம். 

ஆனால் இன்று தமிழ் மக்கள் மீது ஏதோ மிகுந்த அக்­கறை கொண்­ட­வர்போல் கூக்­குரல் இட்டு கொக்­க­ரித்­துக்­கொண்டு போலிப்­பா­சாங்கு காட்­டிக்­கொண்டு தமிழ் மக்­களால் நிரா­க­ரிக்­கப்­பட்­ட­வர்­களை சேர்த்­துக்­கொண்டு ஒரு புதிய கட்­சி­யொன்றை உரு­வாக்­கிக்­கொண்டு தமிழ் மக்­க­ளுக்கு கிடைக்­க­வேண்­டிய உரி­மைகள், செல்­வாக்­குகள் அனைத்­தையும் இல்­லாமல் செய்ய வேண்டும் என்­ப­தற்­காக சில பேரி­ன­வாத கட்­சி­க­ளு­டனும் சம்­மந்­தத்­தினை ஏற்­ப­டுத்தி தமிழ் மக்­க­ளுக்­கான விடிவு கிடைத்­து­வி­டக்­கூ­டாது என்ற சதித்­திட்­டத்தில் ஈடு­ பட்டு வரு­கின்றார். 

ஆனால் எமது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பா­னது இவர்­க­ளது எந்­த­வி­த­மான கொக்­க­ரிப்­பிற்கும் அடி­ப­ணி­யா­த­துடன் இவர்­க­ளது கதை­களை ஒரு போதும் பொருட்­ப­டுத்­தப்­போ­வ­து­மில்லை எமது மக்கள் நலன் சார்ந்த விட­யத்தில் த.தே.கூட்­ட­மைப்பு எப்­போதும் எந்­த­வி­ட­யத்தை எடுத்­துக்­கொண்­டாலும் சரி­யான பாதை­யி­லேதான் செல்லும். 

இங்கு நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்கும் நிகழ்­வா­னது எமது எதிர்­கால சந்­த­தி­யி­ன­ருக்கு மிகவும் முக்­கி­ய­மான நிகழ்­வாகும் நாங்கள் கல்வி என்னும் ஆயு­தத்­தினை கையில் எடுப்­போ­மாக இருந்தால் நிட்­சயம் சாதிக்க முடி­யா­த­வற்­றையும் சாதிக்க முடியும் அன்று எமது ஆயுத போராட்டம் மௌனிக்­கப்­பட்­டதன் பின்னர் இன்று கல்வி எனும் ஆயு­தத்­தினை கையில் எடுத்­தி­ருக்­கிறோம். 

இதன் மூலம்தான் எதிர்­கா­லத்தில் தமிழ் மக்­களின் விடிவை எட்ட முடியும். பல சந்­தர்ப்­பங்­களில் பேரினவாதிகள் த.தே.கூட்­ட­மைப்­பினை பிரித்­தாள பல பிர­யத்­த­னங்­களை எடுத்­தார்கள் ஆனால் எமது கட்­சியும், தமிழ் மக்­களும் அதற்கு ஒரு போதும் இடம்­கொ­டுக்­க­வில்லை இடம் கொடுக்­கவும் மாட்­டார்கள். மக்கள் எப்­போதும் த.தே.கூட்­ட­மைப்­பினர் மீதும், அதன் தலை­மை­மீது பற்­று­றுதி கொண்­ட­வர்­க­ளாக இருக்­கின்­றார்கள் அதற்­கா­கவே எமது மக்­களின் உரி­மைகள், அபி­வி­ருத்­திகள் என்­ப­வற்றை பெற்­றுக்­கொ­டுக்க வேண்­டி­ய­வர்­களாக நாங்கள் இருக்­கின்றோம். 

எப்­போது எமது தமிழ்­மக்­க­ளுக்­கான விடிவு, உரிமை கிடைக்­க­வில்­லையோ அன்றே எமது கட்சி இந்த நல்­லாட்சி அர­சாங்­கத்தை தள்ளி வீழ்த்திவிட்டு நிட்­ச­ய­மாக வெளி­யேறும் என்­பதில் மாற்­றுக்­க­ருத்­திற்கு இட­மில்லை. அன்று மஹிந்த ஆட்சி தமிழ் மக்­க­ளுக்­கான தீர்­வினை கொடுக்கும் என்ற நம்­பிக்­கை­யிலே அந்த மஹிந்த அர­சாங்­கத்­தினை ஆட்­சிக்கு கொண்டு வந்தோம். 

ஆனால் அந்த அர­சாங்­கமோ தமிழ் மக்­க­ளுக் ­கான எந்த தீர்­வையும் வழங்­காத நிலை­யி­லேதான் நாங்கள் அந்த கொடூர ஆட்­சியை வீழ்த்­தி­விட்டு மைத்­திரி தலைமை­யி­லான நல்­லாட்சி அர­சாங்­கத்­தினை ஆட்­சிக்கு கொண்­டு­வந்தோம். 

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை வர் இரா.சம்­பந்தன் தலை­மையில் தமிழ் மக்­க­ளுக்­கான ஒரு சரி­யான தீர்­வினை தர­வேண் டும் என்று பேரி­ன­வா­தி­க­ளுக்கு மீண்டும் ஒரு சந்­தர்ப்­பத்­தினை இந்த அர­சாங்­கத்­திற்கு கொடுத்­தி­ருக்­கின்றோம் மாறாக இந்த அர­சாங்­கத்­தின்­மூலம் தமிழ் மக்­க­ளுக்கு எந்த ஒரு நல்ல தீர்வும் கிடைக்­க­வில்லை என்றால் இந்த ஆட்­சி­யையும் இல்­லாமல் செய்­வ­தற்கு த.தே.கூட்­ட­மைப்பு என்றும் தயங்­காது. 

தமிழ் மக்­களின் விடி­விற்­காக போராடி வரும் த.தே.கூட்­ட­மைப்­பினால் தான் தமிழ் மக்­க­ளுக்­கான அதா­வது இலங்கை தமிழ் மக்­க­ளுக்கு மாத்­தி­ர­மன்றி உலகம் பூரா­க வும் பரந்து வாழும் தமிழ் மக்­க­ளுக்­கான விடிவு எட்­டப்­ப­டுமே தவிர வேறு எந்த புதி­தாக முளைக்கும் கட்­சி­களால் முடி­யாது காரணம் த.தே.கூட்­ட­மைப்­பா­னது விடு­த­லைப்­போ­ராட்ட காலத்­தின்­போதும் அங்­கீக ­ரிக்­கப்­பட்ட ஒரு கட்­சி­யா­கவே இருந்து வரு­கின்­றது. 

இதனை பிளவு படுத்­து­வ­தற்கு உள்­நாட்­டிலும், சர்­வ­தே­சத்­திலும் பாரிய சதித்­திட்­டங்கள் நடை­பெற்று வரு­கின்­றது. 

எமது இனம் இந்த நாட்­டிலே சிக்­குண்டு சின்­னாப்­பின்­ன­மாக தவிர்த்­த­போது கடந்த மஹிந்த அர­சாங்­கத்­துடன் இணைந்து வடக் கும், கிழக்கும் பிரி­வ­தற்கு ஆத­ரவு வழங்கி இன்று இந்த நல்­லாட்சி அர­சாங்­கத்­துடன் இணைந்து கொண்டு வடக்கும், கிழக்கும் இணைய வேண்டும் என்ற தோரணையில் போலியான கூக்குரல் இடு பவர்கள் தற்போதும் இருக்கத்தான் செய்கின்றார்கள். இவர்களை எமது கட்சி ஒரு போதும் கணக் கில் எடுக்கப்போவதில்லை எனவும் கூறினார். 

கடந்த காலங்களில் தமிழர்களே உயர் பதவிகளிலும், நிறைவேற்று அதிகாரங் கொண்டவர்களாகவும் இருந்திருக்கின்றார்கள். ஆனால் அது தற்போது அருகிக் கொண்டு செல்கின்றது. இதனை நாங்கள் மாற்ற வேண்டுவோமாக இருந்தால் நிதானமாக செயற்படவேண்டி இருக்கின்றது இன்று பாராட்டுக்களை பெற்ற அனைவரும் எதிர்காலத்தில் தொடர்ந்து கல்வியில் சாதனைகளை பெற்று தேசிய ரீதியிலும், சர்வதேசரீதியிலும் தமிழ் மக்களின் இருப்பை எடுத்துக்காட்டுகின்ற அளவிற்கு உயர் பதவிகளில் மிளிரவேண்டும்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -