கிண்ணியா முஸ்லிம் மகளீர் மகா வித்தியாலயத்தில் சுற்றாடல் படை அணியினருக்கு பதக்கம் அணிவிக்கும் நிகழ்வு..!

அப்துல்சலாம் யாசீம்-
கிண்ணியா முஸ்லிம் மகளீர் மகா வித்தியாலயத்தில் சுற்றாடல் படை அணியினருக்கு பதக்கம் அணிவிக்கும் நிகழ்வு இன்று (29) அதிபர் திருமதி என்.எஸ்.அமீன்வாரி தலைமையில் நடைபெற்றது.

'சுற்றாடல் எம்மைக் காக்கும் - நாம் சுற்றாடலைப் பாதுகாப்போம்' என்ற தொனிப் பொருளில் மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் வேலைத் திட்டத்துக்கு அமைய ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வில் 75 மாணவர்கள் பதக்கம் அணிவிக்கப்பட்டு, பாடசாலை சுற்றாடல் படையணியில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

இவ் வைபவத்தில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சுற்றாடல் உத்தியோகத்தரும் கிழக்கு மாகாண சுற்றாடல் விழப்புணர்வு நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளருமான எம்.எம்.ஜெயந்தி, கிண்ணியா பிரதேச மாகாண சுற்றாடல் உத்தியோகத்தர் எம்.எப்.எம்.றாபி கிண்ணியா கோட்டக் கல்வி சுற்றாடல் இணைப்பாளர் எம்.எம்.இபாதுள்ளா ஆகியோர் கல்ந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -