சம்பூர் பாடசாலையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் கடற்படை அதிகாரியுடன் நடந்துகொண்ட விதத்தை ஏற்க முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்று (28) ஜோர்தான் நாட்டுக்கான இலங்கை தூதுவர் ஏ.எல்.எம். லாபீரை கௌரவிக்கும் நிகழ்வு கிண்ணியா நகர சபை மைதானத்தில் இடம்பெற்ற போது மேற்கண்டவாறு தெரிவித்ததாக தவல் வெளியாகியுள்ளது.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;
கடந்த 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை சம்பூர் பாடசாலை நிகழ்வொன்றில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் கடற்படை அதிகாரியை மீது பாய்ந்த சம்பவத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது, அத்துடன் இது தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் மண்ணிப்புக்கோர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இவ்விடையம் தொடர்பாக நான் பேசக்கூடாது என்றே இருந்தேன் இருந்தும் இங்கு பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் உள்ளிட்ட பலர் பேசியமையினாலேயே நானும் பேசுவதற்கு தள்ளப்பட்டுள்ளேன்.
2010ஆம் ஆண்டு இடம்பெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது இடம்பெற்ற தேர்தல் பிரச்சார மேடைகளில் பௌத்த தேரர்களை விமர்சித்துப் பேசினேன்.
அப்போது எனது உரைக்கு எதிராக பௌத்த தேரர்கள் மற்றும் பௌத்த அமைப்புக்கள் கிளர்ந்தெழுந்தன. எனினும் அப்போது நான் பேசிய விடயம் தொடர்பில் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியிருந்தேன் என்றார்.
குறித்த செய்தி தொடர்பாக இம்போட் மிரர் செய்திப்பிரிவு அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் தெளபீக்கும் அழைப்பை மேற்கொண்டது, இருந்தும் இவர்களிடத்திலிருந்து எவ்விதமான பதிலும் எமக்கு கிடைக்கவில்லை..