நாட்டில் பல பாகங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பொழியக் கூடும்..!

நாட்டில் பல பாகங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூரியுள்ளது.

இதற்கமைய மேல், தென், மத்திய, மற்றும் சப்ரகமுவ போன்ற மாகணங்களில் மழை பொழியும் என எதிர்வு கூரியது.

மேலும்,கடற் பிரதேசங்களில் காற்று வீசக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை, கடும் மழை காரணமாக நாட்டின் பிரதான கங்கைளின் நீர் மட்டம் உயர்வடைய கூடும் என அவதான எச்சரிக்கையை அனர்த்த முகாமைத்துவ மத்தியம் விடுத்துள்ளது.

நில்வளா கங்கை, களு கங்கை, கிங் கங்கை மற்றும் அத்தனகளு ஒயா போன்ற கங்கைகளில் நீர் மட்டம் உயர்வடையும் சாத்தியம் உள்ளதாக அந்த முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கண்டி, ரத்தினபுரி, நுவரெலியா, களுத்துறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

தேசிய கட்டிட ஆராய்சி நிறுவகம் இதனை தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -