ஏ.ஜே.எம்.ஹனீபா-
சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இரத்த தான நிகழ்வு கல்முனை வடக்கு வைத்திய சாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் கலாபூசணம் மீரா இஸ்ஸதீன் மற்றும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் ஆகியோரின் தலைமையில் இடம் பெற்றது.
இந்த நிகழ்வு அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் பிரதி தலைவரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான கலாபூசணம் ஏ.எல்.எம்.சலீம் மற்றும் கல்முனை வடக்கு வைத்தியசாலை இரத்த வங்கி பொறுப்பதிகாரி டாக்டர். எஸ்.ரமேஸ், சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் நஸ்ரீன் ஜஹான் ஆகியோரின் நெறிப்படுத்தலில் நடை பெற்ற இந்நிகழ்வில் ஊடகவியலாளர்கள், பொலிஸார், இராணுவத்தினர், பொதுமக்கள், இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டு இரத்தானம் வழங்கினர்.