சிப்லி பாறுக்கின் சொந்த நிதியிலிருந்து பாடசாலைக்கு தண்ணீர் வசதியும் மின் விசிறிக்குமான தீர்வு..!

எம்.ரீ. ஹைதர் அலி-
ட்டு மாவட்டத்தின், கல்குடா வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட மட்/ககு/அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் அவர்கள் கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் அழைப்பின் பேரில் 2016.05.05ஆந்திகதி வியாழக்கிழமை விஜயமொன்றை மேற்கொண்டார். 

இவ்விஜயத்தின்போது பாடசாலையின் அதிபர் ஆர். ரவிச்சந்திரன் அவர்கள் பாடசாலையின் தற்போதைய நிலைமையினை மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் அவர்களிடம் தெளிவுபடுத்தினார். இப்பாடசாலையானது தரம் 1-9 வரையான வகுப்புக்களை கொண்டுள்ளதோடு, 175 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். 

இப்பாடசாலையில் ஆசிரியர்களுக்கான பாடசாலை வெற்றிடங்கள் 15 ஆக காணப்பட்டாலும் தற்பொழுது அதிபர் உட்பட 9 ஆசிரியர்கள் மாத்திரமே காணப்படுகின்றனர். அதிலும் குறிப்பாக தற்பொழுது உள்ள நிலையில் ஆரம்பக்கல்வியை போதிப்பதற்கு ஒரு ஆசிரியரும் மேற்பிரிவு கல்வியை போதிப்பதற்கு ஒரு ஆசிரியருமாக இரண்டு ஆசிரியர்கள் தேவைப்படுவதாகவும் குறிப்பிட்ட பாடசாலை அதிபர். 

மேலும் இப்பாடசாலைக்கு ஆசிரியர்கள் நியமனம் பெறுகின்ற போதும் அவர்கள் இப்பாடசாலைக்கு ஒருநாள் கூட வந்து பார்க்காத நிலையில் இடமாற்றம் பெற்று சென்று விடுகின்றனர். இதுதான் தற்பொழுது இப்பாடசாலையின் நிலைமையாக காணப்படுவதாக தெரிவித்த அதிபர். இப்பாடசாலைக்கு வருகின்ற மாணவர்கள் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்தே தங்களின் கல்வியினை தொடர்கின்றனர். 

இப்பாடசாலையில் தரம் 1-9 வரை மாத்திரம் காணப்படுவதால் 9ஆம் தர கல்வியினை முடித்துக்கொண்ட மாணவர்கள் தங்களது மேலதிக 10ஆம் தர கற்றல் நடவடிக்கைகளுக்காக 5 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள பாடசாலைக்கு செல்ல வேண்டி ஏற்படுவதால் தங்களது கல்வியினை 9ஆம் தரத்துடன் நிறைவு செய்து இடைவிலகலில் செல்கின்றனர். 

இதற்கான காரணம் ஒரு நாளைக்கு பாடசாலைக்கு சென்று வர வேண்டுமாயின் 10 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தங்களின் கல்வியினை தொடர வேண்டிய துரப்பாக்கியமே என குறிப்பிட்டார். அத்தோடு வளப்பற்றாக்குறையை பார்க்கின்றபோது தளபாட வசதிகள் மற்றும் நீர் வசதி என்பன மிகவும் குறைபாடாகவே இருந்து வருகின்றது நீர்ப் பிரச்சினையை எடுத்துக்கொண்டால் மலசல கூடத்திற்கு ஆசிரியர்களோ மாணவர்களோ தங்களது தேவைப்பாடுகளை கூட நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலைமையில் இப்பாடசாலை இருக்கின்றது. 

இவை அனைத்தையும் கேல்வியுற்ற மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக்... பாடசாலைகளின் ஆசிரியர் நியமனத்திற்கு பொறுப்பான மாகாண பிரதிக்கல்வி பணிப்பாளரை தொலைபேசியினூடாக தொடர்புகொண்டு இப்பாடசாலையின் நிலவரங்களை விபரித்ததோடு, மேலதிகமாக பாடசாலைகளில் காணப்படும் ஆரம்பக்கல்வி ஆசிரியர்களில் இருவரை இப்பாடசாலைக்கு நியமிக்குமாறும் கேட்டுக்கொண்டார். 

அத்தோடு இப்பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் போக்குவரத்து பிரச்சினை தொடர்பாக வாழைச்சேனை போக்குவரத்து முகாமையாளருடன் கலந்துயாடியபோது சாரதி பற்றாக்குறை நிலவுவதாகவும் அதனை பெற்றுக்கொண்ட பின்னர் இப்பாபடசாலைக்கான அரச பஸ் சேவை ஒன்றினை ஆரம்பிப்பதாக வாக்குறுதியளித்துள்ளார் என மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் தெரிவித்தார். 

மேலும் இப்பாடசாலையில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்து தர தன்னுடைய சொந்த நிதியிலிருந்து தண்ணீர் தாங்கி, நீர் இறைக்கும் பம் (மோட்டர்), நீர் வினியோகத்தை பெறுவதற்கான குழாய் வசதி மற்றும் பாடசாலை அதிபரின் காரியாலயத்திற்கு மின்விசிறி என்பன பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்தார். 

இதனை பெற்றுக் கொடுப்பதற்குரிய ஏற்பாடுகளை செய்யுமாறு KCDAயின் செயலாளரும், மாகாண சபை உறுப்பினரின் ஊடாக இணைப்பாளருமான எம்.ரீ. ஹைதர் அலி அவர்களிடம் பணிப்புரை விடுத்தார். 

இவ்விஜயத்தின்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக், KCDAயின் செயலாளரும், மாகாண சபை உறுப்பினரின் ஊடாக இணைப்பாளருமான எம்.ரீ.ஹைதர் அலி மற்றும் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் ஆகியோர் இச்சந்திப்பில் காணப்பட்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -