இலங்கையில் நாய் வைத்திருப்போரின் கவனத்திற்கு - அரசு

மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு, தெரு நாய்களின் தொல்லைகளைக் குறைக்க கொழும்பில் விசேட திட்டமொன்றை அமுல்படுத்தவுள்ளது.

நாடு முழுவதும் சுமார் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான தெரு நாய்கள் உள்ளதாகஇமாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா சுட்டிக்காட்டியுள்ளர். இவற்றினால் ஏற்படும் சிரமங்களின் காரணமாக, நாள்தோறும் உள்ளுராட்சி சபைகளில் முறைப்பாடுகள் கிடைத்தவண்ணம் உள்ளதாகவும்இஇவ்வாறான தெரு நாய்களினால் மக்களுக்கு உண்டாகும் 

சிரமங்களைத் தவிர்க்கும் நோக்கிலயே, இந்த நடவடிக்கை முன்னடுக்கப்படவுள்ளதாகவும்இமாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். அமைச்சின் கேட்போர் கூட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

நாடு முழுவதிலும் உள்ள உள்ளுராட்சி சபைகளில் வருடாந்தம் நாய்களைப் பதிவாக்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு பதிவு செய்யத்தவறும் பட்சத்தில், நாய்களின் உரிமையாளர்களுக்கு பத்தாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அபராதம் விதிப்பது குறித்த யோசனைக்கு அங்கிகாரம் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர்இ தெரு நாய்களைக் கட்டுப்படுத்த விசேட குழுவொன்றையும் நியமித்துள்ளதுடன், இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறும் அதிகாரிகளைப் பணித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -