மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் பயணித்த வாகனம் நேற்று இரவு இராஜகிரிய பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த வாகனம் தொலைபேசிக் கம்பம் ஒன்றுடன் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் வெலிகடை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட விஜித்த ஹேரத், பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எதுஎவ்வாறு இருப்பினும், வாகனம் மோதியதால் தொலைபேசிக் கம்பத்துக்கு ஏற்பட்ட சேதத்தை தானே சரிசெய்வதாக விஜித்த ஹேரத் குறிப்பிட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.