குடிநீருக்காக தங்களது உயிரை விஷ ஜந்துக்களிடம் பனயம் வைக்கும் வவுணதீவு மக்கள்..!

M.T. ஹைதர் அலி,அஹமட் இர்ஷாட் -
ட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக உஷ்ணம் காரணமாக என்றுமில்லாதவாறு இம்முறை பல கிணறுகளும், நீர் நிலைகளும் வற்றியுள்ளமையை அவதானிக்க முடிகின்றது . 

அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவின் மண்முனை மேற்கு வவுனதீவு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கொத்தியாபுலை, குருந்தயடி முன்மாரி, காஞ்சிரங்குடா என பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கான எவ்விதமான உதவிகளும் இதுவரை வழங்கப்படவில்லை எனவும் ஊடகங்களினூடாக இரண்டு வார காலங்களுக்கு முன்னர் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. 

கடந்த மூன்று நாட்களுக்கு முன் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் அவர்களை தொலைபேசியினூடாக தொடர்பு கொண்டு தமது குடிநீர் பிரச்சினைக்கு ஏதாவது ஒரு தீர்வினை பெற்றுத்தரும்படி கேட்டுக்கொண்டனர். 

இதனையடுத்து 08.05.2016ஆந்திகதி (சனிக்கிழமை) இதன் உண்மை நிலைமையைக் கண்டறிந்து அம்மக்களுக்கு உதவ வேண்டுமென்ற நோக்கில் மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் அங்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.

உண்மையில் நாம் நினைத்துக்கூட பாத்திராத அளவிற்கு இம்மக்களின் நிலை மிக மோசமாகக் காணப்பட்டதுடன் ஒரு குடம் நீருக்காக அதிகாலை மூன்று மணிக்கு காட்டு வழிப்பாதைகளினூடாக பல 100 மீற்றர்கள் போதிய வெளிச்சமற்ற வழிப்பாதைகளினூடாக நடந்து சென்றும் சில வேளைகளில் விஷ ஜந்துக்களின் தீண்டுதளுக்கும் உள்ளாகி குடிப்பதற்கு நீர் சுமந்து வருவதாக மக்கள் மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் அவர்களிடம் குறிப்பிட்டனர்.

ஏனைய பிரதேசங்களில் வீடுகளில் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் ஏன் ஆடம்பர அலங்கார தேவைகளுக்குமென நீரைப் பயன்படுத்தும் அதே வேளை ஒரு குடம் நீருக்காய் உயிரைப் பணயம் வைத்து நீரை பெற்றுக்கொள்ளும் நிலை எங்களுக்கு காணப்படுவதோடு, பாடசாலைக்கு செல்லும் எங்கள் பிள்ளைகள் தண்ணீர் இல்லாத காரணத்தினால் உரிய நேரத்திற்கு பாடசாலை செல்ல முடியாத நிலைமை தோன்றியுள்ளதாகவும் அம்மக்கள் கண்ணீர் மல்க மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் அவர்களிடம் தெரிவித்தனர். 

இதனை அவதானித்த பொறியியலாளர் சிப்லி பாறுக் உடனடியாக வவுணதீவு பிரதேச சபை செயலாளரை உரிய இடத்திற்கு அழைத்து இந்நிலைமையை நேரடியாக அவருக்கு விளங்கப்படுத்தியதுடன் இம்மக்களுக்கு உடனடியாக குடிப்பதற்கான தண்ணீரை வாகனங்களினூடாக வழங்கும்படி உத்தரவிட்டார். 

அத்தோடு, மிக விரைவில் இம்மக்களுக்கு அவர்களின் வாழ்விடங்களுக்கு அருகாமையில் குடிநீர்த் தாங்கிகளை அமைத்து இம்மக்களின் குடிநீர் பிரச்சிணை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென மட்டு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. P.S.M. சாள்ஸ் அவர்களிடமும் கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து உடனடியாக வவுனதீவு பிரதேச செயலாளர் இவ்விடயம் சம்மந்தமாக எதிர்வரும் 10.05.2016ஆந்திகதிற்குள் (செவ்வாய்க்கிழமை) இப்பிரச்சினை தீர்க்கப்படும் என தொலைபேசியினூடாக மாகாண சபை உறுப்பினருக்கு தெரிவித்தார். 

இதற்கு மேலதிகமாக இம்மக்களுக்கு காணப்படும் குடிநீர்ப் பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்க்கும் பொருட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவரும், நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வளங்கள் வடிகாலமைப்பு அமைச்சருமான கெளரவ ரவூப் ஹக்கீம் அவர்களிடம் நிரந்தர நீர் இணைப்பினை இப்பகுதி மக்களுக்கு வழங்குதல் தொடர்பாக நடை பெறும் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி மாகாண சபை உறுப்பினரால் கோரிக்கையொன்றும் முன்வைக்கப்பட்டுள்ளது . 

மேலும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் உதவியுடன் இப்பகுதி மக்களுக்கான குழாய்க்கிணறு மற்றும் கிணறுகளை அமைத்துக் கொடுப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட உள்ளதுடன் இக்கிணறுகளை அமைப்பதற்கான இடங்களை மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் அவர்களிடம் அப்பகுதி மக்கள் அடையாளப்படுத்தினர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -