நல்லாட்சி மீது மக்களின் அதிருப்தி நிலையையும் ஐ.ம.சு.கூ மேதின பங்கேற்பையும் ஒன்றாக பார்க்கும் Raazi Muhammadh Jaabir சகோதரருக்கு,
முகநூலின் உங்களது பதிவு காணக்கிடைத்தது.அதிகார கதிரை காக அலாய் பறக்கிற அங்கலாய்கிற தலைமையாக அதாஉல்லாஹ் வை சித்தரிப்பது தொடர்பில் சில நிகழ்வு சொல்லி விடலாம் என நினைக்கிறேன்.
சகோதரா!
அதாஉல்லாஹ் என்பவர் தனி மனிதர் என எடுக்கும் கருது கோளிலிருந்துதான் உங்களுடைய கருத்துக்களம் உருப் பெறுகிறது.
அதாஉல்லாஹ் என்பவர் கட்சி ஒன்றினுடைய தலைவர் என்பதையும் சுயாதீனமாக இயங்க கூடிய அரசியல் கட்டமைப்புக்களை அந்த கட்சி பெற்றிருக்கிறது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
நல்லாட்சியை நிறுவதற்க்கு அதாஉல்லாஹ்வின் கட்சி பங்களிப்பு எதனையும் செய்யவில்லை. ஆனால் சந்திரிகா அம்மையாரின் காலத்திலிருந்து தேசிய காங்கிரஸ் எனும் கட்சி சுதந்திர கட்சி தலைமையிலான சுதந்திரகூட்டமைப்பின் கீழ் இயங்கி வந்திருக்கிறது.
நல்லாட்சியின் பின் இடம் பெற்ற கட்சி தலைமையின் மாற்றத்தின் போது ஜனாதிபதி சுதந்திர கட்சியின் தலைவரானார். அதன் பின் இடம் பெற்ற முதாலாவது மேதின கூட்டத்தில் கூட அதாஉல்லாஹ் சமுகமளித்திருந்தார். இது இரண்டாவது மேதினம்.
சகோதரா!
அதாஉல்லாஹ் பதவிக்கும் மாலைக்கும் கதிரைக்கும் அலைபவராக இருந்தால் பாராளுமன்ற தேர்தல் முடிந்த கையோடு மீண்டும் அந்தக் கதிரையில் அமர்ந்திருக்க முடியும்.
மகிந்தவோடு இருந்தது என்னவோ அதாஉல்லாஹ் வின் தனிப்பட்ட உறவு அல்ல,அது தேசிய காங்கிரஸிக்கும் சுதந்திர கூட்டமைப்புக்கும் இடையேயான உறவு. நல்லாட்சிக்காக வாக்களித்த மக்களுக்கு என்ன பலன் கிடைத்தது என்று விமர்சிப்பதில் என்ன தவறு இருக்கிறது.
பங்காளி கட்சியாக நாம் இன்று கொண்டு செல்லப்படுகிற ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோரவில்லை சுதந்திர கூட்டமைப்பிலே இருக்கிறோம் அதன் தலைவராக வே ஜனாதிபதி இருக்கிறார்.
நீங்கள் கூறுகிற தத்துவங்கள் கதிரைத் தேவை எல்லாம் ரணிலை ஆதரித்து மகிந்தவோடு அமைச்சராகுவது பொன்சேகா பின்னால் சென்று மீண்டும் மகிந்தவோடு அமைச்சராகுவது என்று சாணக்கியமாக பதில் கூறும் தலைமைகளுக்குதான் பொருந்தும்.
எல்லோரும் மகிந்தைக்கு எதிராக நிற்க்கும் போது நீங்கள் மகிந்தைக்கு ஆதரவாக பதவிக்காக நின்றார் என்று கூறும் நீங்கள் மகிந்த தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் அந்த நிலையையும் அதாஉல்லாஹ்வின் எதிர்ப்பு வாதத்தால் மூடி மறைக்க பார்க்கிறீர் தனக்கு வாக்களிக்காமல் போனாலும் தன் சமுகம் நிலை பெற வேண்டுமென மிகப் பெரிய சமரில் தனது பதவியை இழந்தவர்தான் அதாஉல்லாஹ் என்று உங்கள் கரங்களும் எழுதுகிற காலம் வரும்.
தனது மூச்சை இறுக்க கடிந்து கிழக்கின் சுயாதீனத்திற்கு குண்டு களுக்கும் துப்பாக்கி களுக்கும் முன்னாள் நிமிர்ந்து நின்றதுதான் இந்த அதாஉல்லாஹ் எனும் ஜனநாயகக் போராளி மீது கொண்ட வக்கிரமான செயல்பாட்டின் கொடுரம சுஜுதுகளில் எமது ஊரை பயங்கரவாதிகள் காவு கொண்டார்கள் நிலைத்ததா?
சகோதரா!
மாறித்திரிகிற பஞ்சோதிகளோடு சிங்கத்தையும் சேர்த்து விடுகிற முயற்ச்சியில் நரிகள் ஈடுபடலாம் மனிதம் அதற்கொரு போதும் துணை போகாது என வலுவாக நம்புகிறோம்.
உங்கள் கருத்துக்களை மதித்தவானாகவே விடை பெறுகின்றேன்.
அஷ்மி ஏ கபூர்.