ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தோற்றப்பாட்டுடன் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் வலது கையாக அக்கரைப்பற்றில் திகழ்ந்த முன்னாள் அமைச்சர் அதாஉல்லா ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரபின் சிலமாத தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்று அதனை தன் முயற்சியின் பலனாகவும் மக்களின் ஆதரவினாலும் தொடராக 2015ஆம் ஆண்டுவரை நீடித்தார்.
அவர் சுமார் 15 வருடங்கள் அமைச்சரவை அந்தஷ்த்துள்ள அமைச்சராகவிருந்து தனது ஊருக்கும் மாவட்டத்திற்கும், சகல மாவட்டத்திற்கும் தனது அமைச்சுக்கள் மூலமாக நல்ல பல சேவைகள் செய்தவர். நீர்வழங்கள் வடிகாலமைப்பு அமைச்சராகவிருந்து மர்ஹூம் அஷ்ரபுக்குப் பிறகு முஸ்லிம் இளைஞர்களுக்கு பாரிய தொழில் வாய்ப்புக்களை வழங்கிய முஸ்லிம் அமைச்சர் என்ற அந்தஷ்த்தையும் பாராட்டையும் பெற்றவர்.
அதுபோன்று உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சராகவிருந்து சகல உள்ளூராட்சி மன்றங்களுக்கும் சகல வாகணங்களையும் வழங்கி சாதனை படைத்தவர். அக்கரைப்பற்றான தனதூரை மாநகரமாகவும் பிரதேச சபையாகவும் அழகு பார்த்து தன்னூரை சிங்கப்பூரின் அழகுக்கு மாற்றியவர்.
இன்றும் என்றும் மக்களால் மறக்க முடியாத சகலதுறை வல்லுனராகத் திகழும் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா மீண்டும் நல்லாட்சியுடன் இணைந்து கொண்டமை அனைவராலும் குறிப்பாக அம்பாறை மாவட்ட கல்விச் சமூகம் அவருக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

விராலில்லாத குளத்தில் குரட்டை சட்டித்தனம் காட்டும் நிலமையை அடியோடு விரட்டியடிக்கவும், கல்வி கலாச்சாரம் ஊரின் நிலமைகளைக் க்ருத்தில் கொண்டு மீண்டும் சாணக்கிய அரசியல் செய்ய அதாஉல்லா முன் வந்துள்ளனையானது கல்விச்சமூகத்துக்கு பெரும் வரமாகவே அமைகிறது என்று தெரிவித்துள்ளனர்.