திருமண வீட்டில் பழைய கோபத்திற்காக பீங்கானால் தாக்கி மோதல் - ஒருவர் வைத்தியசாலையில்

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை - கல்கடவெல பகுதியில் திருமண வீடொன்றில் இரு குழுக்களுக்கிடையில் இன்று (09) பிற்பகல் இடம் பெற்ற மோதலில் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கோமரங்கடவெல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு படுகாயங்களுக்குள்ளானவர் முன்னாள் இராணுவ வீரரான கோமரங்கடவெல - கல்கடவெல பகுதியைச்சேர்ந்தவர் (53 வயத) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது- நண்பன்களுடன் சேர்ந்து மது அருந்தி விட்டு பகல் உணவு உண்பதற்காக சென்ற போது பழைய கோபத்திற்காக பீங்கானால் தாக்கியதாக மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட இராணுவ வீரர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அணுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாஸை பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

மோதல் சம்பவம் குறித்து சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கோமரங்கடவெல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -