இலங்கையில் பயிரிடப்படும் கஞ்சாவை மருந்து உற்பத்திக்காக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
நாட்டில் பாரம்பரியமாக முன்னெடுக்கப்பட்டுவந்த ஆயுர்வேத மருத்துவத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளதாகவும் நிகழ்ச்சியொன்றில் பேசும்போது அவர் தெரிவித்தார்.
ஆயுர்வேத மருந்து உற்பத்திக்காக கடந்த காலங்களில், அபினை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டதாகவும் அவர் அக்கூட்டத்தில் கூறினார்.
மருந்து உற்பத்திக்கு கஞ்சாவும் தேவைப்படுவதால் அதனை முறையாக இலங்கையில் உற்பத்தி செய்யவுள்ளதாகவும் அவர் கூறினார்.