கிழக்கு மாகாணத்தில் சிவில் நிர்வாகம் நடைமுறை...!

ண்மையில் சம்பூர் பிரதேச பாடசாலை நிகழ்வொன்றில் கிழக்கு முதல் அமைச்சர் நசீர் அஹ்மத் மற்றும் கடற்படையின் கட்டளையிடும் தளபதி கிழக்கு மாகாண ஆளுனர் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற முரண்பாடு குறித்து பலரும் பல கருத்துக்களை கூறி வருகின்ற நிலைமையில் அதிமேதகு ஜனாதிபதி மற்றும் பிரதமர் இது ஒரு அரசியல் பிரச்சினையாக சிலர் காட்ட முற்படுகின்றனர் மாத்திரமன்றி முஸ்லிம் முதல் அமைச்சர் என்பதால் திசை திருப்ப முயற்சிக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்கள்

இருந்தும் முதல் அமைச்சர் எந்த படை முகாம்களுக்கும் செல்ல முடியாது என்ற கருதும் வந்திருக்கும் நிலையில் முதல் அமைச்சர் கலந்து கொள்ளும் எந்த நிகழ்வுக்கும் படையினர் கலந்துகொள்ள மாட்டார்கள் என்ற கருதும் நிலவி வருகின்றது அவ்வாறு பார்த்தல் குறித்த சம்பவம் முதல் கிழக்கில் சிவில் நிர்வாகத்தை முதல் அமைச்சர் ஏற்படுத்திவிட்டார் என்பதை படையினரே தெரிவித்துள்ளனர்

அவ்வாறாயின் கிழக்கின் அணைத்து நடவடிக்கைகளும் பெரும்பானமையாக கிழக்கு மாகாண சபையின் கீழ் வருவதால் இனி வரும் காலங்களில் சுயமாக சபையின் கீழ் நிர்வாகம் தன்னிச்சையாக செயற்பட குறித்த நிகழ்வு வழிவகுத்துள்ளது

அதற்கு முன்னுதாரனமாக பிரதமரால் முதல் நடவடிகையாக கிழக்கில் கடற்படையின் கட்டளை தளபதியின் இடமாற்றம் இந்த நாட்டில் நல்லாட்சியை பறைசாற்றுகின்ற ஒரு தொனியாக நாம் நோக்கலாம் குறித்த அதிகாரிக்கு இடமாற்றம் இடம்பெறவில்லை மாறாக தளபதிக்கே இடமாற்றம் நிகழ்துள்ளது என்ற வதந்திகளை பரப்புவோர் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் கடற்படையினருக்கு என்று சில சட்டங்கள் உண்டு சிவில் விடயங்களில் தலையிடுவது குறித்து தான் கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான அவரையே சாரும் என்பதால்தான் அவர் இடம் மாற்றபட்டார்

அதை தான் சில காழ்புணர்ச்சி கொண்டவர்களும் விழுந்தும் மீசையில் மண் படவில்லை போன்று சில ஊடகங்களில் அறிக்கை விடுகின்றனர்

கிழக்கு முதல்வர் அன்று அவ்வாறு நியாயத்தை கேட்டதால்தான் இன்று கிழக்கில் உள்ள ஒவொரு அரசியல் பிரமுகர்களின் உரிமைகளை பெற்று தந்திருகின்றார் என்பது ஏற்றுக்கொள்ளவேண்டும் இல்லாவிட்டால் இந்த மாகாணத்திலுள்ள ஒவ்வொரு மக்கள் பிரதிநிதிகளுக்கும் நெறிமுறை தவறிய அவமானம் வெளிவராத நிலைமை என்பன இன்று சொல்லமுடியாத கதையாக உள்ளது என்பதும் உண்மை

இவ்வாறு கடற்படையினர் அனைத்து சிவில் நிர்வாகங்களிலும் தலையிடுவதால்தான் இன்றும் பொதுமக்களுடைய அதிகமான குடியிருப்பு காணிகளை தம் வசம் கையகபடுத்தி இன்னும் விடுவிக்காத நிலையில் சிவில் நிர்வாகத்தை மீறி நடந்து கொள்கின்றனர் அதனாலே இன்னும் கிழக்கில் பல காணி பிரச்சினைகளுக்கு கடற்படையினரே காரணம்

அது மட்டுமன்றி கடந்த மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிகாலத்தில் படையினரிடம் அதிகமான சிவில் நிர்வாகங்கள் ஒப்படைக்கப்படிருந்தன அதனால் குறிப்பாக சிறுபான்மை மக்கள் பட்ட துயரங்களை எவ்வாறு அனுபவித்தோம் என்பதை ஒரு கணம் மீட்டிபாறுங்கள் அதைதான் தொடர்ந்தும் அவர்கள் தக்க வைத்துகொள்ள விரும்புகின்றனர் இதனால் இனவாதிகளும் அவர்களுக்கு சார்பாக அறிக்கைகளும் வீதிகளில் கூக்குரலுமிடுகின்றனர் இவற்றை கிழக்கில் உள்ள அரசியல் தலைமைகள் மற்றும் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்களும் ஆழமாக சிந்திக்க வேண்டிய தருணமிது இதில் கட்சி பேதம் மறந்து செயற்படவேண்டும் என்பதை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் தனது அறிக்கையில் சுட்டிக்காடியுள்ளார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -