மிகச்சிறந்த அரசாங்கத்தை உருவாக்குவதற்கு முறைக்கேடுகள் இல்லாத சிறிலங்கா சுதந்திர கட்சியை உருவாக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
காலியில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மேதின கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
கடந்த தேர்தல்களில் சிறிலங்கா சுதந்திர கட்சி தோல்வி கண்டிருந்தது.
ஆனால் எதிர்வரும் காலத்தில் மிகப்பெரிய வெற்றிகளை நோக்கிய பயணத்துக்கு, இன்றைய மேதின கூட்டம் முதல் அடியாக அமைந்துள்ளது என்று ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.