பாலமுனைக் கிராமத்தின் பின்தங்கிய பகுதிக்கு அப்துர் ரஹ்மான் விஜயம்...!

NFGG ஊடகப் பிரிவு-
காத்தான்குடி பாலமுனைக் கிராமத்தில் மிவும் வறிய மக்கள் வாழும் பிரதேசமான C.I.G வீட்டத்திட்ட பகுதியில்வசிக்கும் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க NFGGயின் தவிசாளர் அப்துர் ரஹ்மான் கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

அங்கு வசிக்கும் மக்கள் நடந்து கூடச் செல்ல முடியாத அளவு மோசமான மணல் ஒழுங்கைகளாகக் காணப்படும்இடங்களை கிறவலிட்டு போக்குவரத்திற்கேற்ற வீதியாக அமைத்தத் தருமாறு அப்பகுதி வாழ் மக்கள் பொறியாலாளர்அப்துர் ரஹ்மானிடம் கோரிக்கை விடுத்தனர்.

பொது மக்களின் இந்த அடிப்படைப் பிரச்சினையின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்ட அப்துர் ரஹ்மான்முடியுமான அளவு விரைவில் இதற்கான ஒரு தீர்வைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.

இந்த விஜயத்தின் போது NFGG யின் சிரேஷ்ட உறுப்பினர் ASM ஹில்மி மற்றும் பாலமுனை பிரதேச NFGGயின்செயற்குழு உறுப்பினரான MAM சியாட், மற்றும் அல்-ஹஸனாத் பள்ளிவாயலின் முன்னாள் தலைவர் இஸ்மாயில், புர்கான் பள்ளிவாயலின் தலைவர் M. மன்சூர் உட்பட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -