ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் வேன் விபத்து...!

க.கிஷாந்தன்-
கொழும்பு பகுதியிலிருந்து அட்டன் பகுதியை நோக்கி சென்ற வேன் ஒன்று அட்டன் கொழும்பு பிரதான வீதியின் பீக் ரெஸ்ட் விடுதி பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த வேன் அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் கொழும்பு பிரதான வீதியின் பீக் ரெஸ்ட் விடுதி பகுதியில் வீதியை விட்டு விலகி மதில் ஒன்றில் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்து 05.05.2016 அன்று காலை மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் இதில் பயணித்த பயணிகள் தொடர்பான தகவல்கள் பொலிஸாருக்கு கிடைக்காத பட்சம் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -